நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Wednesday, May 11, 2011

பெட்ரோல் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்கிறது?

டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைச் சமாளிக்க பெட்ரோல், சீஸல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3-ம், டீஸல் விலை ரூ 4-ம், கேஸ் விலை ரூ 25 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் - டீஸல் விலை உயர்வு மட்டும் நாளை நள்ளிரவே அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு, புதுவை, கேரளா உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ 1.80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.

ஆனால் சில மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதேபோல் டீசல், கேஸ் விலை அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரையும், சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது.

4 comments:

Perungulam Ramakrishnan Josiyar said...

அட போங்கடா உங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லை.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Speed Master said...

எண்ணெய் நிறுவனஙளின் லாபம் சதவீதம் உயர்ந்துதான் உள்ளது அப்புறம் என்ன நஸ்டம்

Roaming Raman said...

மகாதேவி வசனம் தான் நினைவுக்கு வருகிறது... இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாகப் போகட்டும் என்று! -- ரோமிங் ராமன்

Roaming Raman said...

மகாதேவி வசனம்தான் நினைவுக்கு வருகிறது ..... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்... காங்கிரஸ் இருக்கும்வரை (ஆளட்டும் அல்லது எதிரில் இருக்கட்டும்!) இந்த நாடு முன்னேற வாய்ப்பே இல்லை!!! இதில் அன்னையை மிஞ்சிய நாடகக் காரனாக புதல்வன் ராகுல் இன்றைய அறிக்கை: விவசாயிகளுக்காக நான் இறுதி வரை போராடுவேன்!! நல்ல காமெடி.சுவிஸ் வங்கியில் தன் இருப்பு குறையாத வரை என்று prefix சேர்க்கவேண்டும்!!