நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Wednesday, May 18, 2011

2 ஜி வழக்கு: வருமான வரித்துறை தூங்குகிறதா? - உச்ச நீதிமன்றம் காட்டம்


2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததா வருமான வரித்துறை என கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதன் மூலம் பெற்ற பணத்துக்கு முறையாக வருமான வரி செலுத்தாதது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வரி ஏய்ப்பு விவகாரம் 2008-ஆம் ஆண்டே தெரியவந்தும், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர்தான் வருமான வரித்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது. இவ்வளவு தாமதம் ஏன் என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விவேக் தங்கா, இந்த தாமத்தை நியாயப்படுத்தி வாதாடினார். மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் விசாரணையில் தடைகளை ஏற்படுத்தின என்று கூறினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களின் நகல்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

எனினும் நீதிபதிகள் இந்த பதிலில் திருப்தியடையவில்லை. இந்த விஷயத்தில் வருமான வரித்துறை தூங்கி விட்டது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறினர். வருமான வரித்துறை குறிப்பிட்ட காலத்துக்குள் வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் மீது முழுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய முன்றும் தங்களுக்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

No comments: