நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Wednesday, May 18, 2011

ஒரு லட்சம் விசிட்டிங் கார்டு விநியோகிக்க எம்.எல்.ஏ., திட்டம்

மக்கள் தங்கள் பிரச்னையை, 24 மணிநேரமும் தெரிவிக்கும் வகையில், இரு மொபைல் எண்களுடன் ஒரு லட்சம் விசிட்டிங் கார்டுகளை தொகுதி முழுவதும் விநியோகம் செய்யப் போவதாக, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பார்த்திபன் தெரிவித்தார். மேட்டூர் தொகுதியில், தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்திபன், 75 ஆயிரத்து 672 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இது குறித்து எம்.எல்.ஏ., பார்த்திபன் கூறியதாவது: மேட்டூர் தொகுதி மக்கள், என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தொகுதியில் மேட்டூர், மேச்சேரி ஆகிய இரு இடங்களில் அலுவலகம் திறந்து, பொதுமக்கள் பிரச்னையை உடனுக்குடன் தீர்க்க முடிவு செய்துள்ளேன். அவ்வப்போது தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, அவர்கள் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றுவேன். எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்றவுடன் முதல் கட்டமாக கொளத்தூர் ஒன்றியம், பாலமலைக்கு சென்று, அங்குள்ள மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளேன். மேட்டூரில் சொந்தமாக நிலம் வாங்கியுள்ளேன். விரைவில் அந்த நிலத்தில் வீடு கட்டி குடியேற திட்டமிட்டுள்ளேன். தொகுதி மக்கள் குறைகளை, 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் இரு மொபைல் எண்களுடன் கூடிய ஒரு லட்சம் விசிட்டிங் கார்டுகள் அச்சடித்து தொகுதி முழுவதும் விநியோகம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்ச் பாலா: என்னடா நியூஸ் புதுசா இருக்கேன்னு பார்த்தேன், ஓ நீங்க புது எம்.எல்.ஏ வா அதுதான் இப்படி சிந்திக்கிறீங்க....ஆனாலும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

No comments: