நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Saturday, May 14, 2011

திருமலையில் மட்டும் பக்தர்கள் அலைமோதுவது ஏன்?


திருமலை என்பது ஏழு சிகரங்களை உள்ளடக்கிய ஒரு மலை. ஏழு சிகரங்களும் ஆதிசேஷனின் ஏழு தலைகளாகக் கருதப்படுகின்றன. ஏழு சிகரங்களுடன் கூடிய திருமலை சுருண்டு கிடப்பது போன்ற ஒரு தோற்றத்துடன் விளங்குவதால், ஆதிசேஷனே மலை வடிவில் சுருண்டு கிடப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.இது இப்படியிருக்க... சாளக்கிராமம் என்னும் கல் இயற்கையில் கிடைப்பது. மிக அரிதானது. இயற்கையில் கிடைக்கும் இந்தக் கல்லில் சக்தி சக்கரம் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட கற்கள், இறை குடிகொண்டுள்ள மிகச் சக்திவாய்ந்த கற்கள். இந்தக் கற்களை ஆலயங்களில் பூஜையில் வைத்து வணங்குவர்.திருப்பதியின் ஏழு மலைகளும் ராட்சத சாளக்கிராமக்கற்களே. இம்மலையில் எந்த இடத்தை வெட்டிப் பார்த்தாலும் வெட்டப்பட்ட இடங்களில் சக்கர அமைப்பு இருப்பதைக் காண முடியும். சாளக் கிராமக்கல்லை வெட்டிப் பார்த்தால், அதன் உள்ளும் சக்கர அமைப்பு இருப்பதைக் காணலாம்.திருப்பதி மலையேறும்போது, சாலை போடுவதற்காக ஆங்காங்கே வெட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.இந்த வெட்டுகளில் எல்லாம் சக்கர அமைப்பு அமைந்திருப்பதையும் காணலாம். ஆக, திருமலையே ஒரு சாளக்கிராமக்கல் என்பதால் மிகவும் சக்தி படைத்ததாக அது அமைந்திருக்கிறது. அதன் காரணமாகவே, அது அகில மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இப்படிப்பட்டதொரு புண்ணிய ஸ்தலமாக இது இருப்பதால், மக்கள் மறுபடி மறுபடி இந்த மலையை நாடி வந்து ஆனந்தம் அடைகிறார்கள்.திருமலையானது ஒரு சாளக்கிராமக்கல் என்பதால் தான், இதன் புனிதம் கருதி ஸ்ரீராமானுஜர் மலைமேல் தன் பாதம் பதித்துச் செல்ல விரும்பவில்லை. அதனாலேயே அவர் மலையேறி  வெங்கடாசலபதியைத் தரிசிக்காமலேயே இருந்தார். பின், இறுதியில் தன் முழங்கால்களைப் பதித்து, ஊர்ந்து ஊர்ந்தே திருமலை ஏறி வெங்கடாசலபதியைத் தரிசித்தார். 

 -- பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

1 comment:

Rathnavel said...

நல்ல பதிவு.