நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, May 16, 2011

முதன்முதலாக பேரவைக்கு செல்லும் சினிமா பிரபலங்கள்


நடிகர்கள் சரத்குமார், அருண்பாண்டியன் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பேரவைக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக பெற்றுள்ளனர். ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் முதல் முறையாக சட்ட சபைக்கு செல்கிறார். அகில இந்திய மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் தே.மு.தி.க சார்பில் நடிகர் அருண்பாண்டியன் மற்றும் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மூவரும் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்கள். கடந்த முறை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க சார்பில் எஸ்.வி. சேகர் ஆகியோர் பேரவைக்கு சென்றனர்.

ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அருண் பாண்டியன். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது ஐங்கரன் மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார். விஜயகாந்துக்கு ஆரம்ப கால நண்பரான இவர், பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டார். 


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் தொழிலதிபர் ஆவார். இவர் நாடோடிகள், சிந்து சமவெளி, ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட இவர், இப்போது ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1 comment:

Speed Master said...

பார்போம் என்ன செய்றாங்கன்னு


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
சார்லி சாப்ளின் “The Kid”

http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html