நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, May 23, 2011

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!


தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்தபடி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த்தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்துவிட்டது.





அடடா ஒரு 'ஃப்ளோல' சொல்லி மாட்டிக்கிட்டேனே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து தனது நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிடத் துடித்தார்.



ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.



தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை. 



நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்க, நிர்வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர். லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவேலுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு.

பஞ்ச் பாலா: உடன்பிறப்பே, நானும் பேரறிஞர் வடிவேலுவும் பலசமயம் ஒரே மாதிரியான சூழலை எதிர் கொள்கிறோம். அவர் நடித்து சிரிக்க வைக்கிறார். நான் எழுதியும், சில சமயம் 37 நிமிட உண்ணாவிரதம் மாதிரி செயலாலும் சிரிக்க வைக்கிறோம். அவருக்கு லதா மேடம் ஆப்பு, எனக்கு சோனியா மேடம் ஆப்பு. வான்டட் அக வந்த ரவுடி என சொல்வது போல, நாங்களும் காபினெட் ல இருக்கோம்ல என்று போனாலும், எவனும் கண்டுகொள்வதில்லை. பலசமயங்களில், நானாத்தான் வாய கொடுத்து அசிங்கபட்டுடேனா என்று ரெண்டுபேருமே சொல்லுகிறோம். கைப்புள்ள கருணா நிதின்னு பெற மாத்திக்கணும்

2 comments:

சென்னை பித்தன் said...

நடிக்கிற வேலையை மட்டும் பாத்துட்டு இருந்திருந்தா இந்த மாதிரி மாட்டிக்க வேண்டாம் இல்ல!

Speed Master said...

மாப்பு வச்சிட்டாங்கட ஆப்பு