நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Thursday, May 19, 2011

சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன்?-கருணாநிதி வர மாட்டார்??


தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர்களில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. மேலும் சட்டசபை திமுக தலைவராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்று பேச்சு அடிபடுகிறது.

1991ல் திமுகவுக்கு மிகப் பெரிய தேர்தல் அடி விழுந்தது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் பரிதி இளம்வழுதி.

அப்போது கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகுதான் சட்டசபைக்கு அவர் வந்தார்.

தற்போது திமுகவுக்கு அந்த அளவுக்கு அடி கிடைக்கவில்லை என்ற போதிலும் அப்போது கிடைத்த பெரும் தோல்விக்குச் சமமான தோல்வியாகவே தற்போதைய வீழ்ச்சி பார்க்கப்படுகிறது.

காரணம், எந்த தேமுதிகவை படு மோசமான பார்வை பார்த்ததோ திமுக, அந்தக் கட்சி இன்று திமுகவை விட மேம்பட்ட நிலையில் வந்திருக்கிறது. எதிர்க்கட்சியாகவும் மாறியுள்ளது. இது திமுகவினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாகி விட்டது.

ஏதோ ஜந்துவைப் போல பார்த்த தேமுதிக, இன்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் கம்பீரமாக சட்டசபைக்குள் நுழைந்திருப்பது திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக சட்டசபையை மீண்டும் கோட்டைக்கே மாற்றப் போகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுவும் கருணாநிதி மற்றும் திமுகவினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை வரவழைத்து திறந்த கட்டடத்தை, பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டடத்தை ஜெயலலிதா புறக்கணிப்பது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டணியாக ஆளும் கூட்டணி திகழ்கிறது. வெறும் 31 இடங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

இப்படி எங்கு திரும்பினாலும் பாதகமாகவே தெரிவதால் கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும் செயல்பட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே துரைமுருகனுக்கு அந்தப் பொறுப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments: