நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Thursday, May 5, 2011

கோடை வெப்பமும் மின்வெட்டும்


தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அதேசமயம், சரமாரியான மின்வெட்டும் கூடவே சதி செய்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல், எந்த வேலையையும் செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்தில் மாட்டித் தவிக்கின்றனர் மக்கள்.




வரலாறு காணாத அளவுக்கு தமிழகத்தை மின்வெட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதிகாலையிலேயே எழுந்து அரக்கப் பரக்க சட்னி, மசாலா போன்றவற்றை வேகமாக அரைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம், எப்போது கரண்ட் போகும், எப்போது வரும் என்று தெரியாத அவல நிலை.



இதில் எந்தவிதமான பொய்யும் இல்லை. இந்த நிமிடத்தில் தமிழகத்தில் எந்த மூலைக்குப் போனாலம் அங்கு ஏதாவது ஒரு பகுதியில் கரண்ட் இல்லாமல் இருப்பதைக் காணலாம்.



தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. அதாவது அதிகாரப்பூர்வமாக 2 அல்லது 3 மணி நேரம் கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள். இதுபோக அவ்வப்போது இரவு, பகல் பாரபட்சம் பாராமல் கரண்ட்டை கட் செய்து மக்களை கடுப்பேற்றுகிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.



இப்போது சென்னையிலும் மின்சார வெட்டு அமல்பபடுத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் மின்வெட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பகுதிகளில் அதை விட கூடுதலாகவே மின்சாரம் ரத்தாகிறது.



இதை விட கொடுமையாக மின் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 அல்லது 60 பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர். முன்பெல்லாம் வார இறுதி நாட்களில்தான் இந்த மாதப் பராமரிப்பு நடைபெறுவது வழக்கம். அதுவும் கூட குறைந்த பகுதிகளில்தான் நடைபெறும்.



ஆனால் தற்போது இந்த மின் பராமரிப்பு தினசரி நடைபெறுகிறது. இது போக லோ வோல்டேஜ் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது.



இதனால் கம்ப்யூட்டர்கள், டிவி, பிரிட்ஜ் என எதையும் பத்திரப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பல இடங்களில் தொடர் மின்வெட்டு மற்றும் லோ வோல்டேஜ் பிரச்சினை காரணமாக பிரிட்ஜ், டிவி, மிக்ஸி உள்ளிட்டவை பழுதுபடுவது சர்வ சாதாரணமாகி விட்டது.



இப்படி மின்சாரம் ஒருபக்கம் மக்கர் செய்தால், மறுபக்கம் வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் தற்போது தொடங்கி விட்டது. இதனால் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.



பல நகரங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையிலும், வேலூரிலும்தான் வெயில் உக்கிரமாக உள்ளது.



இந்த இரு நகரங்களிலும் 105 டிகிரிக்கு வெயில் கோரமாக உள்ளது. இதேபோல நெல்லை, பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களிலும் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது. மதுரையில் சற்று வெயில் குறைவாக உள்ளது.



கொடும் வெயில், கடும் மின் தடை என்று தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னாலும் கூட அது மிகையில்லை.


மின்சார ஹைக்கூ கவிதை:


தலைப்பு: மின்சாரம்
மின்சாரத்தைப் பற்றி
மண்ணென்ணை விளக்கில் படித்தான் 
மாணவன்....

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மின் வெட்டு சிறு தொழில்கள், மக்களது இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதிக்கிறது.

நிழற்குடை said...

உடுமலை போன்ற பகுதிகளில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்றாடி‍ வகையறாக்களை தவிர மின்சாரத்தை உருவாக்குவதற்கான சோர்ஸ் தமிழகத்தில் மிகவும் குறைவு. வற்றாத ஜீவநதி கிடையாது. அணுமின்சாரம் பயத்திலேயே ஸாரி ஏட்டிலேயே உள்ளது. ஆக சிறிது‍ காலத்திற்கு‍ பொறுமையாக இருப்பதை தவிர வேறு‍ வழியில்‌லை. வேண்டுமானால் அடுத்து‍ வரக்கூடிய அரசாங்கம் மின் திருட்டை தடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி மின்சாரத்தை சேமிக்க வழி காணலாம்.