நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Friday, May 27, 2011

கேபிள் டிவி உரிமையாளர்கள் சனிக்கிழமை அவசர கூட்டம்

தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் வரும் சனிக்கிழமையன்று நடக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்ட அறிக்கை:

சென்னை தவிர மேலும் 3 இடங்களில் பி.இ கவுன்சிலிங்-அரசு திட்டம்

சென்னையில் மட்டுமே தற்போது நடந்து வரும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் எனப்படும் கலந்தாய்வை மேலும் 3 நகரங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு யோசித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பழனி முருகன் கோயிலுக்குப் படையெடுக்கும் கேரள பக்தர்கள்

பழனி மலை முருகனை தரிசிக்கும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அறுபடை வீடு

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. அதனை அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார் என்கிறது தலபுராணம்.

10ம் வகுப்பு பொதுத் தேர்தலில் 5 பேர் முதலிடம்

10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி உள்பட 5 மாணவ, மாணவியர் 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர்.

Wednesday, May 25, 2011

ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்


ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த "பிளே-ஆப்' போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுரேஷ் ரெய்னா, ஆல்பி மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. பெங்களூரு சார்பில் விராத் கோஹ்லியின் ஆட்டம் வீணானது. 

Tuesday, May 24, 2011

ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய கோவை கமிஷனர் சைலேந்திரபாபு

கோவை: மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத ஏழை மாணவிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு உதவினார்.

POSITIVE APPROACH - இணையத்தில் சுட்டது


பஞ்ச் பாலா: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!!!!

நுளம்புக் கடி, புழுக்கத்தில் தவிக்கும் கனிமொழி மலசலகூடத்துக்கு பக்கத்தில் படுக்கும் பரிதாபம்

சுதந்திரப் பறவையாக டில்லிக்கும், சென்னைக்குமாக வந்துபோய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப்போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார். இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் நுளம்புக்கடி, மறுபக்கம் புழுக்கம். இன்னொரு பக்கமோ மலசலகூடத்துக்கு பக்கத்திலேயே படுக்கவேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

முன்னாள் முதல்வரின் பார்வைக்கு


இந்து நாளிதழுக்கு மத்திய அமைச்சர் மாறன் எச்சரிக்கை

நேற்றைய இந்து நாளிதழில் திமுக கட்சியின் அணுமுறைகள் மற்றும் முன்னாள் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நடத்திய உரையாடல்விபரங்களை விக்கிலீக்ஸ் ஆவணங்களிலிருந்து பெற்றதாக பிரபல ஆங்கில நாளிதழான இந்து செய்தி வெளியிட்டிருந்தது.

உயிருக்கு உலை வைக்கும் செல்போன்கள்-தப்பிக்க சில வழிகள்


கையில் செல்போனை பிடித்தபடி கார், பைக் ஓட்டுவதை பலர் ஸ்டைலாக நினைத்து தங்களது வாழ்க்கையை நொடியில் தொலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை காட்டிலும், செல்போன் பேசியபடி வந்து விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்!

நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை அவர் மணக்கிறார்.

மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகனான நடிகர் ராதா ரவிக்கு ரேகா என்ற மகளும், ஹரி ராதாரவி என்ற மகனும் இருக்கிறார்கள். 


போட்டி சட்டசபை கூட்டம்..'சபாநாயகராக' செயல்பட்ட ஜெயகுமாருக்கு சபாநாயகர் பதவி!

திமுக ஆட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களைக் கொண்டு சட்டசபைக்கு வெளியே போட்டி சட்டசபையை நடத்தி, அதில் சபாநாயகராகவும் 'நடித்த'ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவியை தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அரசு நூலகங்களில் 'விடுதலை'க்கு தடை-ஜெ உத்தரவுக்கு வீரமணி கண்டனம்

'விடுதலை' நாளேட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அண்ணாவின் பெயரையும் 'திராவிட' என்ற இன அடையாளத்தையும் கொண்ட அதிமுக ஆட்சி நடத்தும் கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான- அதன் தாய் என்று சொல்லத்தக்கதான 'விடுதலை' ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



'விடுதலை' ஆசிரியரான வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்களின் 'கெசட்' என்றால் அது 'விடுதலை' என்பது சுவர் எழுத்தாகும். நம் ஆயுதம் 'விடுதலை' என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார். தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் 'விடுதலை' என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.



''ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்; இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாய்க் கிடக்கிறாய். வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்தநீ, இன்று செங்கை ஏந்திக் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’.''



''இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்று மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது. ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?'' (திராவிட நாடு 27.6.1948) என்று 'விடுதலை' சார்பில் நின்று விவேகக் குண்டுகளை வீசினார் அண்ணா.



தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும், தலையங்கங்களும், பெட்டிச் செய்திகளும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்திலும்கூட பெரும் புயல்களைக் கிளம்பியதுண்டு.



1939ம் ஆண்டிலேயே ஈழத் தமிழரைப் பற்றி எழுதியது 'விடுதலை'; இந்தி எதிர்ப்புப் போரில் இணையற்ற தளபதியாகக் களத்தில் நின்று வெற்றி வாகைசூடிய விவேக சிந்தாமணி விடுதலை.



குலக்கல்வித் திட்டத்தை ஓட ஓட விரட்டியடித்து, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டு அகலச் செய்து, கர்ம வீரர் கல்வி வள்ளல் காமராசரை அரியாசனத்தில் அமர வைத்ததில் 'விடுதலை'யின் பங்கு என்ன என்பதை வரலாறு வாழ்நாள் எல்லாம் பேசிக் கொண்டே இருக்கும்.



சமூக நீதிக்களத்தில் அதன் பங்களிப்பு சாதாரணமானதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்காக முழு மூச்சாகப் பாடுபட்ட பேராயுதம் எது? 'விடுதலை' தானே? 31 (சி) சட்டத்துக்குக் கருத்துரு கொடுத்தது 'விடுதலை'யே!.



ஏன்? இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் 31(சி) சட்டத்தினைக் கொண்டு வந்து 69 சதவீகிதம் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியதற்கு கருத்துரு கொடுத்ததும் 'விடுதலை'யன்றோ!



ஆட்சிகள் போகலாம்- வரலாம்; அதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளத் தேவையில்லை.



மே 16ம் தேதி, முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்கிறார் என்றால் அவசர அவசரமாக அன்றைய தினமே அரசு நூலகங்களில் 'விடுதலை' ஏட்டை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?



2012 மார்ச் வரை அரசு நூலகங்களில் 'விடுதலை' இடம் பெறுவதற்கான அரசு ஆணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், திடீரென்று அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டிய அவசியம்- அவசரம் ஏன்?, ஏன்?.



மாறுபட்ட கருத்துகள்- விளக்கங்கள் கூடவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உகந்ததுதானா?. ‘விடுதலை’யைப் பொறுத்தவரையில் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் நடைபோடும் பகுத்தறிவு ஏடு.



பகுத்தறிவு கொள்கையோடு உலகிலேயே வீரநடை போடும் ஒரே ஏடு 'விடுதலை'யே!. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51(ஏ)வில் கண்டுள்ள விஞ்ஞானம், சீர்திருத்த மனப்பான்மையை அன்றாடம் வளர்க்கும் ஒரே ஏடும் விடுதலையே! இதற்காக திராவிட இயக்கங்கள் பெருமைப்பட வேண்டாமா?.



அரசு என்பது அனைத்து மக்களுக்கும் கருத்துரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு கொண்டதல்லவா!.



அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நான் எப்பொழுதும் செயல்படுவதில்லை என்று கூறும் முதலமைச்சர் திடீரென்று 'விடுதலை'யை நிறுத்தியது எந்த அடிப்படையில்? அல்லது அவர் அறியாமல் 'அதி விசுவாசிகளான' அதிகாரிகளின் வேலையா இது?



பெண்கள் உரிமைக்காக வாழ்நாள் எல்லாம் குரல் கொடுப்பதை குருதியோட்டமாகக் கொண்ட 'விடுதலை' ஏடு பெண் ஒருவர் முதல்வராக இருந்த ஒரு கால கட்டத்தில் அரசு நூலகங்களுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டது என்ற பழியைச் சுமக்கலாமா?



அதிமுக அரசின் இந்தச் செயல்பாடு- காலா காலத்துக்கும் குற்றச் செயல் என்று பேசப்படாதா?



எப்படிப்பட்ட 'விடுதலை?' தந்தை பெரியார் அவர்களின் போராயுதம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா, டி.ஏ.வி.நாதன், பண்டித எ.முத்துசாமிப்பிள்ளை, அ.பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்ட அரும் பெரும் வரலாற்றுப் பெருமைக்குரிய ஏடாயிற்றே!



அண்ணாவின் பெயரையும் 'திராவிட' என்ற இன அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சி ஆட்சி நடத்தும் ஒரு கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான- அதன் தாய் என்று சொல்லத்தக்கதான 'விடுதலை' ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா?



புதிய புதிய சட்டங்கள் உருவானதற்கும், தமிழர்களைப் பாதிக்கச் செய்யும் சட்டங்கள் பின் வாங்கப்படுவதற்கும், புதிய புதிய திட்டங்கள் கருக் கொள்வதற்கும், பிற்போக்குத்தனமான திட்டங்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓட்டம் பிடிப்பதற்கும் காரணமாக இருந்தது ‘விடுதலை’ அல்லவா! ‘விடுதலை’ வெறும் காகிதமல்ல- தமிழர்களைப் பழைய நிலையிலிருந்து விடுதலை செய்த வீரவாள்!- போர் வாள்!!



கடலூர், மதுரை சிறைகளில் 'விடுதலை'க்குத் தடை போடப்பட்டது- சிறை அதிகாரிகளால்; அந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனு ஒன்றைத் தாக்கல் செய்தோம். உள்துறை தனிச் செயலாளர் அந்தத் தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் (27.11.1987) வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தது உண்டே!.



1935ல் தொடங்கப்பட்டு, பவள விழாவும் கண்ட திராவிட இயக்க மூச்சுக் காற்றான 'விடுதலை' ஏட்டை நூலகங்களில் நீக்கிய பழியை முதலமைச்சர் ஏற்க வேண்டாம் என்பது நமது வேண்டுகோள்.



நெருக்கடி நிலை என்னும் நெருப்பாற்றை எல்லாம் நீந்திக் கரை சேர்ந்த வரலாறு 'விடுதலை'க்கு உண்டு; இப்பொழுது நடப்பது நெருக்கடி நிலை ஆட்சியல்லவே!
முதலமைச்சர் பரிசீலிக்கட்டும்!



முதலமைச்சர் அவர்கள் நிதானமாகக் கருத்து செலுத்தி, நல்லது நடக்க ஆவன செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.



கழகத் தோழர்களே, தமிழ் இன உணர்வாளர்களே விடுதலை சந்தாக்களைக் குவியுங்கள்!, பணிகளை உடனே துவக்குங்கள்!!.



இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

பஞ்ச் பாலா: 
என்னது இந்த ஆட்சில இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கின்றனவா? இது இப்போது விடுதலை இணையதளத்தில் இருந்து எடுத்த படம். பாருங்கள்.


ஐயா வீர(?)மணியாரே நீங்க மணி அடிக்க வேண்டியதுதான் அதுக்காக நாங்க எல்லாரும் உங்கள் மாதிரியே அடிக்கணுமான்னு மக்கள் கேட்குராங்க. மேலுள்ள படத்தினை பாருங்கள் அதிலுள்ள விஷயங்கள் ஏதாவது நமக்கு உபயோகமானதாக உள்ளதா? விடுதலையிலிருந்து விடுதலை அளித்த ஜெயலலிதாவுக்கு நன்றி.

Monday, May 23, 2011

கொடைக்கானல் கோடைவிழா மே 28-ம் தேதிக்கு மாற்றம்: அமைச்சர் விசுவநாதன் துவக்கி வைப்பு


 கொடைக்கானலில் கோடை விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மே 27-ம் தேதிக்கு பதில் 28-ம் தேதி துவங்குகிறது. இதனை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர். விசுவநாதன் தொடங்கி வைக்கிறார். 

அமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம்-சிபிசிஐடி விசாரணைக்கு ஜெ. உத்தரவு


சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார். மேலும் இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் இன்றுகாலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.

சபாநாயகர் வேட்பாளராக ஜெயக்குமார் அறிவிப்பு-துணை சபாநாயகராகிறார் ப.தனபால்


 தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் எம்.எல்.ஏ.வான ப.தனபாலை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதாவே இன்று வெளியிட்டார். சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கடந்த அதிமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தற்போதைய அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படவில்லை. இதனால் லேசான சலசலப்பு கூட எழுந்தது. ஆனால் சக்தி வாய்ந்த சபாநாயகர் பொறுப்பை அவருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர். மே 27ம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேபோல ராசிபுரம் தொகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியை தோற்கடித்தவர் தனபால் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சபாநாயகர் பதவிக்கு பழ. கருப்பையா நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வழக்கறிஞரான ஜெயக்குமாரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று முதல்வர் ஜெயலலிதா கருதியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


கருணாநிதி போட்ட 'டிராமா'


ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.



ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!


தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்தபடி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த்தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்துவிட்டது.





அடடா ஒரு 'ஃப்ளோல' சொல்லி மாட்டிக்கிட்டேனே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து தனது நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிடத் துடித்தார்.



ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.



தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை. 



நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்க, நிர்வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர். லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவேலுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு.

பஞ்ச் பாலா: உடன்பிறப்பே, நானும் பேரறிஞர் வடிவேலுவும் பலசமயம் ஒரே மாதிரியான சூழலை எதிர் கொள்கிறோம். அவர் நடித்து சிரிக்க வைக்கிறார். நான் எழுதியும், சில சமயம் 37 நிமிட உண்ணாவிரதம் மாதிரி செயலாலும் சிரிக்க வைக்கிறோம். அவருக்கு லதா மேடம் ஆப்பு, எனக்கு சோனியா மேடம் ஆப்பு. வான்டட் அக வந்த ரவுடி என சொல்வது போல, நாங்களும் காபினெட் ல இருக்கோம்ல என்று போனாலும், எவனும் கண்டுகொள்வதில்லை. பலசமயங்களில், நானாத்தான் வாய கொடுத்து அசிங்கபட்டுடேனா என்று ரெண்டுபேருமே சொல்லுகிறோம். கைப்புள்ள கருணா நிதின்னு பெற மாத்திக்கணும்

Sunday, May 22, 2011

Saturday, May 21, 2011

ராஜபக்சேவின் மரண நாள்

ராஜபட்சே ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார்.அதற்கு ஜோதிடர்,' தமிழர் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். உடனே,' தமிழர்திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார்.ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் தமிழர் திருநாள்.''

நன்றி: கவிஞர் இரா.ரவி

ஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக பறந்தது: பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு

தொலைத்தொடர்பு வசதியை மிக அதிக நவீன முறையில் மேம்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-8 என்ற செயற்கைகோளை தயாரித்தது.




3100 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இஸ்ரோ தயாரித்துள்ள மிகப் பெரிய செயற்கை கோள்களில் ஒன்றாகும்.   இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.08 மணிக்கு பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜிசாட்-8 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.


சிறிது நேரத்தில் அது சுற்றுப்பாதையில் பறக்க விடப்பட்டது. ஜிசாட் செயற்கை கோள் வெற்றிகரமாக தன் பணிகளை செய்யத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 600 கோடி ரூபாய் செலவில் ஜிசாட் செயற்கை கோள் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஜிசாட்-8 செயற்கை கோள் திட்ட வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டி உள்ளார். இதற்கிடையே இன்று காலை 10.32 மணிக்கு இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் அஸ்த்ரா ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது. விண்ணில் இருந்து விண்ணில் பாய்ந்த இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்ச் பாலா:
விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். அப்படியே ஒரு கோரிக்கை: ஊழல் செய்றவங்கள ராக்கெட் விட்டு கண்டுபிடிக்க ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்களேன்.

தாலிக்குத் தங்கம் பெற தேவையான தகுதிகள்-அரசு அறிவிப்பு


தமிழக அரசின் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய தேவைப்படும் 4 கிராம் தங்கம் ஆகியவற்றைப் பெற தேவையான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

பபடித்த ஏழைப் பெண்கள் மற்றும் டிப்ளமோ பெற்ற பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் ஆகிய உறுதிமொழியை அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பிறப்பித்தார் ஜெயலலிதா.

தற்போது இதற்கான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த விவரம்...

- படித்த ஏழை பெண்களை பொறுத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச்சேர்ந்த பெண்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

- திருமண உதவி கேட்கும் பெண்ணின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த தகுதியுடைய பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.

- இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும். 

- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும்.

- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித்திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறுவோருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.

கிறிஸ்தவ பெண்கள் சிலுவையுடன் கூடிய தாலி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் கருகுமணியுடன் கூடிய தாலி அணிகின்றனர். எனவே, அனைவருக்கும் ஒரேமாதிரியான தாலி செய்து கொடுக்க இயலாது. 

எனவே, அவரவர் விருப்பப்படி தாலியை செய்து கொள்ள வசதியாக தங்க நாணயம் கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. தங்கத்தை மொத்தமாக ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்வதா அல்லது டெண்டர் மூலம் வாங்குவதா என்று பலவழிகளிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேற்கண்ட இரண்டு திருமண உதவித்திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும்.

1200 கோடி முதலீடு செய்யும் லேலண்ட்


இந்த நிதியாண்டில் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஞ்ச் பாலா

பஞ்ச் பாலா:


பத்திரிகை செய்தி: வீர(?)மணி அறிக்கை:எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும் கழுகுகள் ஆயிற்றே! தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான் கார்ட்டூன் போடும்.
பஞ்ச் பாலா: அது சரி பார்ப்பானாவது தர்ப்பணம் பண்ணி வைச்சு 50, 100 வாங்குவான். ஐயா உங்க ஆட்கள் எங்க தொப்புள் கொடி உறவுகள் இறந்தப்ப அவங்க பிணத்தின் மீது உட்கார்ந்து அம்பாரித்தனம் பண்ணினதை மறந்துட முடியுமா? மீண்டும் உங்கள் தானைத்தலைவரின் கட்சி பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காது என்று உறுதியளிக்க முடியுமா? கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எந்த வர்ணமென்று சொல்ல முடியுமா? 

பாவத்தின் சம்பளம் மரணம்.


நேற்று கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர் மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம் என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனை துன்பம் என்றார்கள்.



இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா.... ?



கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்த பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.  





1.    கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.



2.    முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி



3.    முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி



4.    சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி



5.    மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி



6.    அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி



7.    செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.



8.    சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.



9.    மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.



10.    ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி



11.   மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.



12.   உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.



13.   கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.



14.   கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.



15.   ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.



16.   கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.



17.   சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.



18.    சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.



19.   கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.



20.   பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.



21.    பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.



22.   மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.



23.   பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.



24.    மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.

25.   மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.



26.   சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.



27.   எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)



28.   தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)



29.   சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)



30.   முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)



31.   ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.



32.   தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்



33.   தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம், கருணாநிதி பெயரில்.



34.   தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு 1 கோடி.



35.   துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.



36.     மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.



37.   மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.



38.   மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.



39.   மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.



40.   மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.



41.    மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.



42.   மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.



43.   மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.



44.   மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.



45.   மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.

46.    மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.



47.   மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.



48.   கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.



49.    தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.



50.   சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.



51.   சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.



52.   காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.



53.   சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.



54.   சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.



55.   மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.



56.   மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.



57.   மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.



58.    சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.



59.   வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.



60.   கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.



61.   ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.



உறுதி செய்யப் படாத சொத்துக்கள்



62.    அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.



63.   கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.



64.   தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.

65.   எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.



66.   மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.



67.   சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.



68.   கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.



இப்போது சொல்லுங்கள்....... இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா ?


பஞ்ச் பாலா:
யம்ம்ம்மாடி இப்பவே கண்ண கட்டுதே!!!!!




எல்டிடிஈ மூத்த தலைவர் நெடியவன் நார்வேயில் கைது


விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவபரன் நார்வேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பல மில்லியன் யூரோ நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பாக நெதர்லாந்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

DLF IPL - "பிளே ஆப்' சுற்று எப்படி?

ஐ.பி.எல்., "டுவென்டி-20' 2011 தொடரின் லீக் சுற்றுகள் முடியவுள்ள நிலையில், "பிளே ஆப்' சுற்று போட்டிகள் விரைவில் துவங்குகின்றன.



நான்காவது ஐ.பி.எல்., தொடரில் லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகின்றன. வரும் 24ம் தேதி முதல், "பிளே ஆப்' எனப்படும் அடுத்த சுற்று போட்டிகள் நடக்கின்றன. தற்போதைய நிலையில் சென்னை, பெங்களூரு அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன. கோல்கட்டா, பஞ்சாப், மும்பை அணிகள் இடையே, அடுத்த இரு இடங்களுக்கு பலத்த போட்டி காணப்படுகிறது.

மற்றபடி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் என ஐந்து அணிகள், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

"பிளே ஆப்' எப்படி?

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விவரம்:

போட்டி 1: 
நாள்: 24-05-2011
இடம்: மும்பை
முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும். தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

போட்டி 2: 
நாள்: 25-05-2011
இடம்: மும்பை

இதில் மூன்று, நான்காவது இடம் பிடித்த அணிகள் மோதும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி, தொடரில் இருந்து வெளியேற நேரிடும். சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பும் கிடைக்காது.

போட்டி 3: 
நாள்: 27-05-2011
இடம்: சென்னை

இதில் போட்டி 1ல் தோல்வி, போட்டி 2ல் வென்ற அணிகள் மோதும். இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும். இருப்பினும், இந்த இரு அணிகளுக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கலாம்.

போட்டி 4: பைனல்
நாள்: 28-05-2011
இடம்: சென்னை

நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனல். இதில், போட்டி 1 மற்றும் 3ல் வென்ற அணிகள் மோதும்.

பஞ்ச் பாலா


படம்: சவுக்கு (நன்றி)

பஞ்ச் பாலா:
செய்தி 01: கனிமொழி ஸி.பி.ஐ யால் கைது செய்யப்பட்டார்.

செய்தி 02: சென்னையில் நேற்றிரவு பயங்கர மழை

மேலே உள்ள இரண்டு செய்திகளுக்கும் எந்த விதமான சம்பந்தம் இல்லை.

Friday, May 20, 2011

கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு-சிபிஐ கைது செய்தது, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் கைது

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு சென்றது.
அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.
இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.
அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.
காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.
அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்யவும் அவர் சிபிஐக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு சென்றது.
கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண் கலங்கிய கனிமொழி:
முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார்.
முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.
சிறையில் யார் யார்?:
இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

கனிமொழிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா அல்லது சிறைவாசமா?-இன்று தீர்ப்பு

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. அதில் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் கருணாநிதி குடும்ப வட்டாரம் கவலையில் மூழ்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ. 204 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும்என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவிக்கவுள்ளார். முன்ஜாமீன் கிடைத்தால் கனிமொழி சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பிப்பார். இல்லாவிட்டால், அவர் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் கருணாநிதி குடும்ப வட்டாரம் கவலையில் மூழ்கியுள்ளது.

Thursday, May 19, 2011

ரங்கசாமியின் துரோகம்: ஜெயலலிதா கடும் கண்டனம்


“தனித்தே ஆட்சி” என்று தன்னிச்சையாக புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்  என். ரங்கசாமி அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது, “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.
தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று  கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.


14 தேசிய விருதுகளை வாரிச் சுருட்டிய தமிழ்!

இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. மொத்தம் 14 விருதுகளை தமிழ் சினிமா தட்டிச் சென்றுள்ளது.


இத்தனை விருதுகளை தமிழ் சினிமா இதுவரை பெற்றதாக நினைவில்லை. அந்த அளவுக்கு 58வது தேசிய விருதுகளை தமிழ் சினிமா சுனாமி போல வந்து வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது.


சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன்?-கருணாநிதி வர மாட்டார்??


தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர்களில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. மேலும் சட்டசபை திமுக தலைவராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்று பேச்சு அடிபடுகிறது.

1991ல் திமுகவுக்கு மிகப் பெரிய தேர்தல் அடி விழுந்தது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் பரிதி இளம்வழுதி.

அப்போது கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகுதான் சட்டசபைக்கு அவர் வந்தார்.

தற்போது திமுகவுக்கு அந்த அளவுக்கு அடி கிடைக்கவில்லை என்ற போதிலும் அப்போது கிடைத்த பெரும் தோல்விக்குச் சமமான தோல்வியாகவே தற்போதைய வீழ்ச்சி பார்க்கப்படுகிறது.

காரணம், எந்த தேமுதிகவை படு மோசமான பார்வை பார்த்ததோ திமுக, அந்தக் கட்சி இன்று திமுகவை விட மேம்பட்ட நிலையில் வந்திருக்கிறது. எதிர்க்கட்சியாகவும் மாறியுள்ளது. இது திமுகவினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாகி விட்டது.

ஏதோ ஜந்துவைப் போல பார்த்த தேமுதிக, இன்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் கம்பீரமாக சட்டசபைக்குள் நுழைந்திருப்பது திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக சட்டசபையை மீண்டும் கோட்டைக்கே மாற்றப் போகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுவும் கருணாநிதி மற்றும் திமுகவினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை வரவழைத்து திறந்த கட்டடத்தை, பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டடத்தை ஜெயலலிதா புறக்கணிப்பது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டணியாக ஆளும் கூட்டணி திகழ்கிறது. வெறும் 31 இடங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

இப்படி எங்கு திரும்பினாலும் பாதகமாகவே தெரிவதால் கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும் செயல்பட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே துரைமுருகனுக்கு அந்தப் பொறுப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம்

புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 23 ம் தேதி கூடுகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இதற்கான ஏற்பாடுகள் தடல், புடலாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 3 வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவின் புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆகும்.



இது குறித்து சட்டசபை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் 23 ம் தேதி மதியம் 12. 30க்கு சட்டசபை கூடுகிறது. இந்நாளில் எம்.எல்.ஏ.,க்கள் உறுதிமொழி ஏற்பர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்படும் பின்னர் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு சபாநாயகர் , துணைசபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படும். ஜூன் 3 ம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரவாரம், சலசலப்புக்கு இடமில்லை: இந்த சட்டசபை கூட்டத்தில் பெரும் ஆரவாரம், சலசலப்பு எதுவும் இருக்காது காரணம் அ.தி.மு.க- தே.மு.தி.க., இடது சாரி கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் எதிர்ப்பலைகள் இருக்க வாய்ப்பில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு : அமைச்சரவை ஒப்புதல்

ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்றும், இதன்மூலம், மக்களின் சமூக பொருளாதார நிலை தெரியவரும் என்று ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெரீனாவில் காணாமல் போன சிறுமி தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார்

மெரீனா கடற்கரையில் கடந்த புதன்கிழமை காணாமல் போன சிறுமி தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. கடந்த புதன்கிழமை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மெரீனாவுக்கு சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தமன்னா திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவரது பெற்றோர் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமும் மகளை தேடிவந்தனர். அத்துடன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி அளித்தனர்.
இந்நிலையில், தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோரும் உறவினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீரஜ் பாஃலோ அப்



சென்னை அரசு பொதுமருத்துவமனையில் ‘இரத்தப்புற்று நோய்”க்கான
சிகிச்சைபெறும் சிறுவன் நீரஜ்’ஜுக்கு உதவ முன்வந்துள்ள என் வாசகர்களுக்கு மனங்கனிந்த நன்றி. 

சிறுவனின் தாய் திருமதி சுமதியின் கைப்பேசி எண், மற்றும் அவரது வங்கிக் கணக்கு எண் இவற்றை கொடுத்துள்ளேன்.

நீங்களும், உங்கள் நண்பர்களும் செய்யும் பேருதவியால் அச்சிறுவன்
முற்றிலும் நலம்பெற்று மீண்டுவர உங்கள் பிரார்த்தனைகளும் உடன்
நிற்கட்டும்.

திருமதி சுமதி : கைப்பேசி எண்: 9003563388
வங்கிக் கணக்கு எண்:
S.B.A/c No. 29755
Indian Overseas Bank, Salem, Tamilnadu.

கிரிஜா மணாளன்
Editor
www.smspoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com
(ஆர்.நந்தகோபால்)
கைப்பேசி எண்: 9952422383. 

2 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி கறுப்புப் பணம் மீட்பு


நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ.30,000 கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா கூறினார். கடந்த இரு ஆண்டுகளில் இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் அவர் பேசுகையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்டிருந்த கறுப்புப் பணம் ரூ. 30,000 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்தால் இவ்வாறு கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இந்த கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது. ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், யாருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடுவது கிடையாது.

கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள் செலுத்திய வரி திரும்ப (ரீபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடியாகும்.

இந்த ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் வருமான வரியாக ரூ. 74,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15ம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28,000 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையை விட இது மூன்று மடங்கு அதிகம்.

வருமான வரித்துறையில் கிரிமினல் புலனாய்வு இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துவிட்டார்.

மேலும் ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறோம். வரி விதிக்கப்படாத 14 நாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுடன் பேசி வருகிறோம். இதில் பஹாமஸ், ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் நாம் கேட்கும் தகவல்களை அளிக்கின்றன. இந்தத் தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்யவோ அல்லது இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் வர்த்தகம் செய்யவோ மிக அதிகமான வரிகளை விதிக்கலாம் என்றார்.

பஞ்ச் பாலா: கிடைச்சது இவ்வளவு, பதுக்கியது எவ்வளவோ?

ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - முதல்வர் ஜெ.வின் அதிரடி ஆக்‌ஷன் ஆரம்பம்


தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

மாநில சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி என்ற அதிகாரமில்லாத பதவியில் முடக்கி வைக்கப்பட்டிருந்தார்.

அதே போல திமுக ஆட்சியில் மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு 'டம்மி போஸ்ட்' என்பது குறிப்பிடதக்கது.

2 நாளில் சிறைத்துறையிலிருந்து உளவுப் பிரிவுக்கு வந்த ராஜேந்திரன்:

சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற அதே தினமே இவர் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக அதிகாரமற்ற பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டார். ஆனால், நேற்று இவருக்கு மிக மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பை தந்துள்ளார் ஜெயலலிதா.

திமுக ஆட்சியிலும் இவர் நடுநிலையோடு செயல்பட்டதால் இந்தப் பரிசு அவருக்குத் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அதிகாரிகள் மாற்றங்கள் குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் நேற்றிரவு வெளியிட்ட உத்தரவு விவரம்:

- மாநில உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி டி.ராஜேந்திரன் (சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர்) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கூடுதலாக கவனித்து வந்தார்.

- மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி எஸ்.ஜார்ஜ் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.

ஒதுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன்-ஜாங்கிட்:

- மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்பார். மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபி ஆஷீஸ் பெங்ரா மாற்றப்பட்டு உள்ளார்.

- மத்திய போலீஸ் பயிற்சி பள்ளி சிறப்பு அதிகாரியாக உள்ள கூடுதல் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் நாகர்கோவிலில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜாபர்சேட்டுக்கு மண்டபம் அகதி முகாம்:

- கூடுதல் டிஜிபி எம்.எஸ்.ஜாபர்சேட் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டு இருக்கிறார்.

- மேற்கு மண்டல ஐ.ஜி. பி.சிவனான்டி திருச்சியில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்பார்.

சென்னை கூடுதல், இணை கமிஷனர்கள்:

- மாநில நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. தாமரைக்கண்ணன் சென்னை நகரின் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள ஐ.ஜி. ஷகீல் அக்தர் மாற்றப்பட்டார்.

- சென்னை தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள கூடுதல் கமிஷனர் எம்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.

- மாநில தலைமையக ஐ.ஜி. அபய்குமார் சிங் சென்னை நகரின் தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.

- திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன் சென்னை தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு இணை கமிஷனர் பெரியய்யா மாற்றப்பட்டு உள்ளார்.

- மத்திய அரசு பணியில் உள்ள டி.ஐ.ஜி. கே.சங்கர் மத்திய சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

- ஆயுதப்படை டி.ஐ.ஜி. என்.கே.செந்தாமரைகண்ணன் வடசென்னை இணை கமிஷனராக பொறுப்பேற்பார். வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி பணிமாற்றப்பட்டு உள்ளார்.

- ஈரோடு அதிரடிப்படி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.வி.கருப்பசாமி சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஆகிறார். மைலாப்பூர் துணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் மாற்றப்பட்டார்.

- சென்னையில் உள்ள மாநில ஓ.சி.ஐ.யு. பிரிவு சூப்பிரண்டு திருநாவுக்கரசு தியாகராயநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தியாகராய நகர் துணை கமிஷனர் சண்முகவேலு மாற்றப்பட்டார்.

- தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன் சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆகிறார். அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் மாற்றப்பட்டு உள்ளார்.

- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பேற்பார். புளியந்தோப்பு துணை கமிஷனர் என்.பாஸ்கரன் மாற்றப்பட்டார்.

- ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்ட் அவினாஷ்குமார் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகிறார். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமார் மாற்றப்பட்டு உள்ளார்.

- வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.எஸ்.அன்பு பூக்கடை துணை கமிஷனராக பொறுப்பேற்பார். பூக்கடை துணை கமிஷனர் பி.பகலவன் மாற்றப்பட்டார்.

- கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.கண்ணன் திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் என்.எம்.மயில்வாகனன் மாற்றப்பட்டு உள்ளார்.

பவானீஸ்வரி துணை கமிஷனர்:

- கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.பவானீஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஆகிறார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமி மாற்றப்பட்டார்.

- மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் ஆகிறார். அண்ணா நகர் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் மாற்றப்பட்டார்.

- தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சுதாகர் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆகிறார். அந்த பதவியில் இருந்த துரைராஜ் மாற்றப்பட்டுள்ளார்.

- திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷி நிர்மல் குமார் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்பார். அந்த பதவியில் இருந்த எஸ்.மனோகரன் மாற்றப்பட்டார்.

- ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை கமாண்டன்ட் அனிஷா உசேன் சென்னை போக்குவரத்து போலீஸ் மத்திய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரயில்வே டி.ஐ.ஜியாக பொன்மாணிக்கவேல்:

- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் மாநில ரயில்வே டி.ஐ.ஜி.யாக சென்னைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் இருந்த பி.சக்திவேலு மாற்றப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் தரப்பட்ட பொன்மாணிக்கவேலுக்கு இந்த முறை ரயில்வே டிஐஜி பதவியே கிடைத்துள்ளது.