டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. அதில் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் கருணாநிதி குடும்ப வட்டாரம் கவலையில் மூழ்கியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ. 204 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும்என்று வாதிட்டார்.
அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த நிலையில் இன்று கனிமொழி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவிக்கவுள்ளார். முன்ஜாமீன் கிடைத்தால் கனிமொழி சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பிப்பார். இல்லாவிட்டால், அவர் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் கருணாநிதி குடும்ப வட்டாரம் கவலையில் மூழ்கியுள்ளது.

No comments:
Post a Comment