சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் படத்திற்கு அவனியாபுரத்தில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு ஏராளமான மக்கள் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் சில கட்சிகள் கடுப்பாகி தேர்தல் ஆணையம் சர்வாதிகாரி போன்று செயல்படுவதாகக் குற்றம்சாட்டின.
பணப்பட்டுவாடா செய்வது பெரும்பாலும் தடுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தலையும், வாக்கு எண்ணிக்கையையும் நடத்தியது. இதனால் தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து மதுரை அவனியாபுரத்தில் பணப் பரிவர்த்தனை குறைதீர் விழிப்புணர்வு குழுமத்தின் அவனியாபுரம் கிளை சார்பில் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டது. அதில் அவனியாபுரம் பகுதி இளைஞர்கள் மற்றும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சேர்ந்து பாலாபிஷேகம் செய்தனர். வழக்கமாக நடிகர், நடிகைகளுக்குத் தான் பாலாபிஷேகம் செயவார்கள். தற்போது ஒரு அரசு அதிகாரிக்கு செய்து கௌரவப்படுத்தியுள்ளனர்.
பஞ்ச் பாலா:
பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே॥
No comments:
Post a Comment