நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Friday, May 27, 2011

சென்னை தவிர மேலும் 3 இடங்களில் பி.இ கவுன்சிலிங்-அரசு திட்டம்

சென்னையில் மட்டுமே தற்போது நடந்து வரும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் எனப்படும் கலந்தாய்வை மேலும் 3 நகரங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து தமிழக அரசு யோசித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.



தற்போது தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் அல்லாமல் ஒற்றைச் சாளர முறையில், அதாவது மாணவர்களை நேரில் வரவழைத்து கலந்தாய்வு மூலம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மட்டும்தான் கலந்தாய்வை நடத்துகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து வகையான 484 பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த ஒரு மையம மூலம் மட்டுமே மாணவர் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.

இதை மாற்றி சென்னைக்கு வெளியே வேறு சில முக்கிய நகரங்களிலும் கலந்தாய்வை நடத்த வேண்டும். இதன் மூலம் பெற்றோர்கள், மாணவர்களுக்கு வீண் செலவு, அலைச்சல், மன அழுத்தம் உள்ளிட்டவற்றைக் குறைக்கலாம் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் கடந்த திமுகஆட்சியில் இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சி, இதுகுறித்து பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

அதன்படி சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்தான் கலந்தாய்வு நடந்து வருகிறது. அதை மாற்றி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இதை கொண்டு வருவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

ஜூன் 3வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கவுள்ளதால், மிகவும் குறுகிய காலமே உள்ளது. எனவே கலந்தாய்வை வேறு சில நகரங்களிலும் நடத்துவது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: