சுதந்திரப் பறவையாக டில்லிக்கும், சென்னைக்குமாக வந்துபோய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப்போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார். இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் நுளம்புக்கடி, மறுபக்கம் புழுக்கம். இன்னொரு பக்கமோ மலசலகூடத்துக்கு பக்கத்திலேயே படுக்கவேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.