நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     
Showing posts with label பத்திரிகை செய்தி. Show all posts
Showing posts with label பத்திரிகை செய்தி. Show all posts

Tuesday, May 24, 2011

இந்து நாளிதழுக்கு மத்திய அமைச்சர் மாறன் எச்சரிக்கை

நேற்றைய இந்து நாளிதழில் திமுக கட்சியின் அணுமுறைகள் மற்றும் முன்னாள் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நடத்திய உரையாடல்விபரங்களை விக்கிலீக்ஸ் ஆவணங்களிலிருந்து பெற்றதாக பிரபல ஆங்கில நாளிதழான இந்து செய்தி வெளியிட்டிருந்தது.

Wednesday, May 11, 2011

மீண்டும் உடைந்தது பல்சக்கரம்: ஊட்டி மலை ரயில் ரத்து


ஊட்டி: தண்டவாளப் பல் சக்கரம் உடைந்ததால் ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி மலை ரயில்:

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வது மலை ரயில். மேட்டுப்பாளையத்தில் துவங்கி குன்னூர் வழியாக ஊட்டி வரை செல்லும் 


இந்த மலை ரயில் பசுமையான காடுகள், கணவாய்கள் ஆகியவற்றை ஊடறுத்துச் செல்வதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அடுத்தடுத்து செயலிழப்பு:

இந்த முறை சீசன் துவங்கியதிலிருந்தே இந்த ரயில் அடிக்கடி நின்று போவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் தடம் புரண்டதால் ஒருவாரகாலமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டு நேற்றுத்தான் போக்குவரத்து துவங்கியது.

உடைந்துபோன பல் சக்கரம்:

இந்நிலையில் நேற்றைய பயணத்தின்போது பீனியன் வீல் எனப்படும் தண்டவாளப் பல்சக்கரம் சேதம் அடைந்தது. மலையேற்றத்தின்போது ரயில் தானாகவே பின்வராமல் இருக்க தாங்கிப்பிடிப்பதே பீனியன் வீலின் பணி. ரண்ணிமேடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தண்டவாளம் உடைந்திருப்பதை ரயில் ஓட்டுனர் நசுரூதின் கண்டுபிடித்தார். இதனை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

வருகிறது அதிகாரிகள் குழு:

அடுத்தடுத்து ரயில் நிறுத்தப்படுவதால், சென்னையிலிருந்து ரயில்வே அதிகாரிகள் இன்று குன்னூருக்கு வர இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, May 5, 2011

கருத்து கணிப்புகள் சரியாகுமா?

கட்டுரையாளர் சோலை "முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவர்; என் மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவர் சோலை' என, கருணாநிதியால் வர்ணிக்கப்படுபவர். "நக்கீரன்' இதழில் இவர் எழுதும் தொடர் கட்டுரையின் மறுபதிப்பு இது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜெயலலிதா தான் என்று பிரகாஷ்காரத், ஏ.பி.பரதன் போன்ற இடதுசாரி தலைவர்கள் கட்டியம் கூறினர். "மே 15ல், ஜெயலலிதா முதல்வராக முடிசூடுகிறார்' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஈரோட்டில் பிரகடனம் செய்தார். ஏன்? அடுத்த முதல்வர் ஜெ., தான் என்று கடந்த ஓராண்டு காலமாகவே, ம.தி.மு.க., தலைவர் வைகோவும் முழங்கி வந்தார்.

இத்தகைய அறிவிப்புகள் எல்லாம், அ.தி.மு.க.,வினரை உற்சாகம் கொள்ளச் செய்தன. காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகள் என்று தி.மு.க., அறிவித்தது. காங்கிரஸ் தொண்டர்களை விட, அ.தி.மு.க.,வினர் தான் அதிகம் மகிழ்ந்தனர். பா.ம.க.,விற்கு 30 இடங்கள் என்று செய்தி வந்தது; அந்தக் கட்சி தொண்டர்களை விட, அ.தி.மு.க., தொண்டர்கள் தான் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாங்கள் சந்திக்க போகும் இந்த எதிர் முகாம்கள் பலவீனமானவை என்பது அவர்கள் கணிப்பு. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., அங்கம் பெறுவது உறுதி என்ற தகவல் வந்த போது, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டதாகவே ஆர்ப்பரித்தனர். இந்த நிலையில் தான் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவைகள் நியாயமான கணிப்புகளும் அல்ல; நேர்மையான தீர்ப்புகளும் அல்ல.

கடந்த 1971ல், சட்டசபை, லோக்சபா தேர்தலில் போது கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. "ராஜாஜியும், காமராஜரும் அமைத்த கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க., கூட்டணி தோல்வியுறும்' என, கணிப்புக்களும், விமர்சனங்களும் வாரி இறைக்கப்பட்டன. ஆனால், மக்கள் எப்படி தீர்ப்பளித்தனர்? தி.மு.க., தமிழகத்தில் அரியணை ஏறியது; மத்தியில் இந்திரா பிரதமரானார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, டில்லி ஆங்கில தொலைக்காட்சிகளும் ஆங்கில வார ஏடுகளும் எப்படி கணித்தன? அகில இந்திய அளவில், பா.ஜ., ஆட்சி என்றனர். இல்லையேல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு பார்லிமென்ட் என்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி முன்பை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியது. தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி ஒன்பதே இடங்களில் தான் வெற்றி பெறும். அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தன. தேர்தல் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதை அறிவோம். அவர்கள் தங்கள் ஆசைகளை செய்திகளாக்குகின்றனர். தங்கள் விருப்பங்களை கருத்துக் கணிப்புக்களாக கதை புனைகின்றனர்.

பிரபல ஆங்கில வார ஏடும், அதன் தொலைக்காட்சியும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டிருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணிக்கு, 50 சதவீத ஓட்டுகளும், 164 தொகுதிகளும் கிடைக்கும். தி.மு.க., கூட்டணிக்கு, 45 சதவீத ஓட்டுகளும், 68 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பங்கள் உருவாவதற்கு முன் இந்த கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டன. இவர்கள் எல்லாம் மக்களிடம் எத்தகைய கேள்விகளை எழுப்பினர்? விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி இந்த பிரச்னைகளில் உங்களை மிகவும் பாதித்தது எது என்ற அளவில் தான் கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டிருக்கின்றவா? அதன் சாதனைகளில் தங்களைக் கவர்ந்தது எது? அந்தச் சாதனைகள் தொடர வேண்டுமா என்ற அளவில் எந்தக் கருத்துக் கணிப்பாளரும் மக்களிடம் கேள்விகள் எழுப்பவில்லை. மக்கள் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினரோ, அதற்கு ஏற்ப கேள்விகளை எழுப்பினர்.

இந்தச் சூழலில் நாம் ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறோம். தமிழக சட்டசபை தொகுதிகளில், 79 தொகுதிகள் நகர்புறத் தொகுதிகள், 164 தொகுதிகள் கிராமப்புறத் தொகுதிகள். தமிழக அரசின் நலத்திட்டங்கள் எட்டாத கிராமங்களே இல்லை. பயன் பெறாத குடும்பங்களே இல்லை. எனவே, எந்த அளவிற்குக் கிராம மக்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வருகின்றனரோ, அந்த அளவிற்கு தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு அமையும். காங்கிரஸ் - பா.ம.க., - சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்திருக்கிறது. அவைகளில், 70 தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என, அ.தி.மு.க., கணக்கிட்டு சொல்கிறது. இந்த கணக்கின் விடை, 13ம் தேதி தெரிந்து விடும்.

கட்டுரையாளர் சோலை, பிரபல அரசியல் விமர்சகர். 

Source: Dinamalar

Saturday, April 30, 2011

"விஷ' மாம்பழத்தை கண்டறிய முடியுமா?


செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மதுரையில் சமீப காலமாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இப்பழத்தை உண்போருக்கு வயிற்றோட்டம், பேதி, கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம்போல, மக்களை கவரும் இந்த மாம்பழங்கள் விஷமானவை. மாம்பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கஷ்டமான காரியம்.

மாம்பழங்களின் பழுக்கும் தன்மை குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சி.முத்துத்துரை கூறியதாவது: கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டு பிடிப்பது கடினமானது. அனுபவத்தின் மூலமே அறிய முடியும். பொதுவாக வெளித்தோற்றமே பழம்போல இருக்கும். உள்ளே பழுத்த தன்மையோ, சுவையோ, மணமோ இராது. எந்த ஒரு பழமும் விளைச்சல் (ஏச்ணூதிஞுண்tச்ஞடூஞு Mச்tதணூடிtதூ) என்ற நிலைக்கு வந்த பின்பே, அதில் சுக்ரோஸ் என்ற இனிப்பு தன்மை வரும். அதன் பின் புகைமூட்டம் போன்றவற்றால் பழுக்க வைப்பதால் பாதிப்பு வராது. ஆனால் காயாக இருக்கும்போதே, அதை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை விவசாய கல்லூரி தோட்டக்கலைத் துறை தலைமை பேராசிரியர் மாரியப்பன் கூறியதாவது: செயற்கையாக பழுத்த மாம்பழங்களை வெளிப்புற தோற்றம் மூலம் கண்டு பிடிக்க முடியாது. அதிகளவில் பழங்களை வாங்குவோர், பழங்களில் ஒன்றை வெட்டிப் பார்த்து சுவைத்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனெனில் செயற்கையாக பழுத்த பழங்களில் இயற்கையான பழம்போன்ற சுவையோ, மணமோ இருப்பதில்லை, என்றார்.

பேராசை பெரும் நஷ்டம் :மதுரை மாவட்டத்தில் 6721 எக்டேர் நிலத்தில் மா விவசாயம் நடைபெறுகிறது. இதில் 26 ஆயிரத்து 884 மெட்ரிக் டன் மாம்பழம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் இந்த மாம்பழங்கள் மதுரை மார்க்கெட்டிற்கு வருகிறது. பெரும்பாலும் விவசாயிகளிடம் குத்தகைக்கு பெறும் விவசாயிகள், அவசர கதியில் மாங்காய்களை பறித்து, செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கடந்தாண்டு கார்பைடு மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர் என்பது மக்களிடையே பரவியதால் மாம்பழ விற்பனை படுத்து விட்டது. இந்தாண்டும் கார்பைடு பழ பீதியால் முறையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்க கூட மக்கள் அஞ்சுகின்றனர்.கார்பைடு மூலம் பழுக்க வைக்கும் முறையை முழுமையாக கை விட்டால் தான் மக்கள் மாம்பழத்தின் பக்கம் திரும்புவர்.

மதுரையில் கடந்த சில நாட்களாக "விஷ' மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதையடுத்து மதுரை பழக்கமிஷன் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அறிவுச் செல்வம், முருகானந்தம் தலைமையில் நடந்த அவசர பொதுக்குழுவில் சில தீர்மானங்களை நிறைவேற்றினர். அனைத்து வியாபாரிகளும் கால்சியம் கார்பைடு கல்லை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இனிவரும் நாட்களில் அவ்வாறு தவறு செய்பவரை அடையாளம் கண்டு சட்ட பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இனிவரும் நாட்களில் கல் வைக்காமல் பழுக்க வைத்த பழங்கள் விற்பனைக்கு தரப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி பழங்களை வாங்கி பயன்படுத்தலாம். பழவியாபாரிகள் மீதான வழக்குகளை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர். 

Source: Dinamalar