நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Saturday, May 21, 2011

தாலிக்குத் தங்கம் பெற தேவையான தகுதிகள்-அரசு அறிவிப்பு


தமிழக அரசின் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய தேவைப்படும் 4 கிராம் தங்கம் ஆகியவற்றைப் பெற தேவையான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

பபடித்த ஏழைப் பெண்கள் மற்றும் டிப்ளமோ பெற்ற பெண்களுக்கான திருமண உதவித் தொகை மற்றும் தாலி செய்ய 4 கிராம் தங்கம் ஆகிய உறுதிமொழியை அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பிறப்பித்தார் ஜெயலலிதா.

தற்போது இதற்கான தகுதிகள் குறித்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த விவரம்...

- படித்த ஏழை பெண்களை பொறுத்தவரை, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச்சேர்ந்த பெண்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

- திருமண உதவி கேட்கும் பெண்ணின் தந்தைக்கு ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த தகுதியுடைய பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.

- இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானமும் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும். 

- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும்.

- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித்திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறுவோருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.

கிறிஸ்தவ பெண்கள் சிலுவையுடன் கூடிய தாலி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இஸ்லாமிய பெண்கள் கருகுமணியுடன் கூடிய தாலி அணிகின்றனர். எனவே, அனைவருக்கும் ஒரேமாதிரியான தாலி செய்து கொடுக்க இயலாது. 

எனவே, அவரவர் விருப்பப்படி தாலியை செய்து கொள்ள வசதியாக தங்க நாணயம் கொடுக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. தங்கத்தை மொத்தமாக ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்வதா அல்லது டெண்டர் மூலம் வாங்குவதா என்று பலவழிகளிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேற்கண்ட இரண்டு திருமண உதவித்திட்டங்களின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.290 கோடி கூடுதலாக செலவாகும்.

Thursday, May 19, 2011

மெரீனாவில் காணாமல் போன சிறுமி தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார்

மெரீனா கடற்கரையில் கடந்த புதன்கிழமை காணாமல் போன சிறுமி தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. கடந்த புதன்கிழமை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மெரீனாவுக்கு சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தமன்னா திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவரது பெற்றோர் டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமும் மகளை தேடிவந்தனர். அத்துடன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி அளித்தனர்.
இந்நிலையில், தமன்னா கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோரும் உறவினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Wednesday, May 18, 2011

உயர் கல்விக்கு ஏங்கும் "முதல்' மாணவி


பிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர். தேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. அதிக மதிப்பெண் பெற்றும், "டாக்டர் கனவு' எட்டாக்கனியாக உள்ளது. கடின உழைப்பு, அறிவுக்கூர்மைக்கு குடும்ப பொருளாதாரம் முட்டுக்கட்டையாக உள்ளது. உயர்கல்விக்கு யாராவது உதவினால், இவரது லட்சியம் நனவாகும். உதவ விரும்புவோர், "99942- 61727' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



நாகலெட்சுமிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள், தாங்கள் அனுப்ப விரும்பும் தொகையை சின்னாளப்பட்டி கனரா வங்கி கிளை மூலம் அனுப்பலாம். வங்கி : கனரா வங்கி, சின்னாளப்பட்டி. அக்கவுண்ட் நம்பர் : 1003101028258. IFSC code : CNRB 0001003.

அவரது முகவரி : 
எஸ்.நாகலெட்சுமி, தந்தை பெயர் எ. சரவணன், 8/24/10, துர்கை அம்மன் ‌கோயில் தெரு, கீழக்கோட்டை, சின்னாளப்பட்டி - 624301. திண்டுக்கல்.

Saturday, May 14, 2011

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு


காணமல் போனவர் பற்றி அறிவிப்பு,


பெயர் : வடிவேலு


நிறம் : கருப்பு


வயது : 40


ஊர் : மதுரை.


இவரை பற்றிய தகவல் அறிந்தால் விஜயகாந்திடம் ஒப்படைக்கவும் நன்றி.


Wednesday, May 11, 2011

ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்தார் சென்னை திவ்யதர்ஷினி


டெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நாட்டிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் திவ்யதர்ஷினி.

பி.ஏ., பி.எல் படித்துள்ள திவ்யதர்ஷினி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படித்தவராவார். இவர் 2010ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து திவ்யதர்ஷினி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல ரேங்க் கிடைக்கும் என்று எனக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் ரேங்க் கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அரசுப் பணியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். ஊழல் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக செயல்பட நான் ஆர்வமாக உள்ளேன் என்றார்.

2வது ரேங்க்கை ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.டெக் படித்த ஸ்வேதா மொஹந்தி பெற்றுள்ளார்.

ஆண்களிலும் சென்னையைச் சேர்ந்தவரே முதலிடம்

அதேபோல ஆண்களைப் பொறுத்தவரை முதலிடத்தைப் பிடித்துள்ளார் வருண்குமார். இவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ரேங்குகள் தமிழகத்திற்கு

முதல் பத்து இடங்களில் வந்துள்ளவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புதிய பெருமையாகும்.

அருண்குமார் 3வது இடம், சங்கரன் - 4வது இடம், அரவிந்த் - 8வது இடம் பிடித்துள்ளனர்.

மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 36 பேர் பிரிலிமினரி தேர்வை எழுதினர். இவர்களில் 12,491 பேர் மெயின் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 2589 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். அவர்களில் 920 பேர் (இவர்களில் 717 பேர் ஆண்கள், 203 பேர் பெண்கள்) வெற்றி பெற்று தற்போது தர வரிசைப்படி ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் பிற சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

முதல் 25 இடங்களைப் பிடித்துள்ளவர்களில் 20 பேர் ஆண்கள், ஐந்து பேர் பெண்கள். இவர்களில் 15 பேர் என்ஜீனியர்கள், 5 பேர் வர்த்தகம், நிர்வாகவியல், ஹியுமானிடிக்ஸ், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரிகள். ஐந்து பேர் மருத்து அறிவியல் படித்தவர்கள்.

டாப் 25 பேரில் எட்டு பேர் முதல் முறையிலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். நான்கு பேர் 2வது முயற்சியிலும், 9 பேர் மூன்றாவது முயற்சியிலும், 3 பேர் நான்கு மற்றும் ஒருவர் ஐந்தாவது முயற்சியிலும் வென்றுள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம் - www.upsc.gov.in.