நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Tuesday, May 24, 2011

நுளம்புக் கடி, புழுக்கத்தில் தவிக்கும் கனிமொழி மலசலகூடத்துக்கு பக்கத்தில் படுக்கும் பரிதாபம்

சுதந்திரப் பறவையாக டில்லிக்கும், சென்னைக்குமாக வந்துபோய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப்போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார். இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் நுளம்புக்கடி, மறுபக்கம் புழுக்கம். இன்னொரு பக்கமோ மலசலகூடத்துக்கு பக்கத்திலேயே படுக்கவேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.


காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை காவலரிடம் தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள் இராத்திரி சரியாகத் தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று காவலர் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். நுளம்புத் தொல்லை தாங்க முடியவில்லையாம். நுளம்புகளிடமிருந்து தப்பிக்க நுளம்புச்சுருள் கொடுத்தால் நல்லது என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை. காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரட், சப்ஜி கோபி குடித்தார். உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம். கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் மலசலகூட வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

இங்கே சற்று பாருங்கள்:



No comments: