புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 23 ம் தேதி கூடுகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இதற்கான ஏற்பாடுகள் தடல், புடலாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 3 வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவின் புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆகும்.
இது குறித்து சட்டசபை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 23 ம் தேதி மதியம் 12. 30க்கு சட்டசபை கூடுகிறது. இந்நாளில் எம்.எல்.ஏ.,க்கள் உறுதிமொழி ஏற்பர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்படும் பின்னர் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு சபாநாயகர் , துணைசபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படும். ஜூன் 3 ம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரவாரம், சலசலப்புக்கு இடமில்லை: இந்த சட்டசபை கூட்டத்தில் பெரும் ஆரவாரம், சலசலப்பு எதுவும் இருக்காது காரணம் அ.தி.மு.க- தே.மு.தி.க., இடது சாரி கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் எதிர்ப்பலைகள் இருக்க வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment