திமுக ஆட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களைக் கொண்டு சட்டசபைக்கு வெளியே போட்டி சட்டசபையை நடத்தி, அதில் சபாநாயகராகவும் 'நடித்த'ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவியை தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அதே போல திமுக ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்த வி.பி.துரைசாமியை ராசிபுரம் தொகுதியில் வென்ற தனபாலுக்கு, அதே துணை சபாநாயகர் பதவியை வழங்கியுள்ளார்.
கடந்த சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் ஜனவரி மாதம் நடந்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்து பேரவைக்கு வெளியே போட்டிக் கூட்டம் நடத்தினர்.
அந்தக் கூட்டத்தின் 'சபாநாயகராக' ஜெயகுமார் செயல்பட்டார். இப்போது அவரே சபாநாயகராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
துணை சபாநாயகரை தோற்கடித்து துணை சபாநாயகாரன துரைசாமி:
அதே போல ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.தனபால், சட்டப்பேரவை துணை சபாநாயகாரக தேர்வு செய்யப்படவுள்ளார்.
1972ல் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியது முதல் அந்தக் கட்சியிலேயே உள்ள இவர், கடந்த அதிமுக ஆட்சியில் உணவு- கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.
இந்த முறை ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5வது முறையாக எம்எல்ஏவானார். அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். படத்தை வணங்கி பதவியேற்ற பெண் எம்.எல்.ஏ:
நேற்று எம்எல்ஏக்கள் பதவியேற்றபோது மையிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜலட்சுமி எம்.ஜி.ஆர். படத்தை வணங்கிய பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
எல்லா அதிமுக எம்.எல்.ஏக்களுமே கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
கன்னடத்தில் பதவியேற்ற கோபிநாத்:
ஓசூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கோபிநாத் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் உறுதிமொழி அளித்து திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டசபை எம்எல்ஏவான இவருக்கு தமிழ் மொழியை சரளமாக பேசத் தெரியாது, முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பேரவை மாடத்தில் சசிகலா:
எம்எல்ஏக்கள் பதவியேற்பை முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா சட்டசபை மாடத்தில் அமர்ந்தபடி பார்த்தார்.
அதே போல தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட கட்சியினரும் மாடத்திலிருந்து அவை நடவடிக்கைகளைப் பார்த்தனர்.
No comments:
Post a Comment