நேற்றைய இந்து நாளிதழில் திமுக கட்சியின் அணுமுறைகள் மற்றும் முன்னாள் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நடத்திய உரையாடல்விபரங்களை விக்கிலீக்ஸ் ஆவணங்களிலிருந்து பெற்றதாக பிரபல ஆங்கில நாளிதழான இந்து செய்தி வெளியிட்டிருந்தது.
தன்னை பற்றிய அச்செய்தி அவதூறானதும் உண்மைக்கு மாறானதும் என்று குற்றஞ்சாட்டி இந்து நாளிதழுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அறிவிக்கை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அனுப்பியுள்ள அறிவிக்கையில்,நேற்றைய இந்து இதழின் முதல் மற்றும் 11ஆம் பக்கங்களில் தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து 2008ஆம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது, அவதூறானது, கற்பனையானது, தவறான உள்நோக்கம் கொண்டது. சுயலாப நோக்கங்களுக்காக, எனக்கு எதிரானவர்களுடன் இணைந்து இந்து நாளிதழ், சமுதாயத்தில் எனக்குள்ள மரியாதையையும் நல்ல பெயரையும் கெடுக்கும் நோக்கில் திட்டமிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.
பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவரை பற்றிய செய்தி உண்மையானதுதானா என்று சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்த பிறகு பிரசுரிப்பதே பத்திரிகை தர்மம்.ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படும் கண்ணியமான எந்த பத்திரிகையும் அதையே செய்யும். ஆனால் இந்து நாளிதழ் அந்த குறைந்தபட்ச கடமையைக்கூட செய்யத் தவறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
இந்து நாளிதழ், விற்பனைச் சரிவை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் சமீபகாலமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ரகசியங்கள் என்ற பெயரில் ஆதாரமற்ற செய்திகளை மலிவான விளம்பரம் தேடுவதற்காக வெளியிட்டு வருவது தெரிகிறது. அதிகம் விற்பதற்காக ஒழுக்க நியதிகளிலிருந்து இந்து நாளிதழ் தடம் புரண்டுச் செல்கிறது.
மேற்கண்ட செய்தியை இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம் உடனடியாக திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிப்பதுடன் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடும் தரவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இந்து நாளிதழ் மற்றும் அதனை வெளியிட்ட முதன்மை ஆசிரியர்மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார்.

பஞ்ச் பாலா:
[1]
/*
ஒழுக்க நியதிகளிலிருந்து இந்து நாளிதழ் தடம் புரண்டுச் செல்கிறது.
*/
ஆமாமா யார் ஒழுக்கத்திலிருந்து போகிறார்கள் என்பதை கடந்த ஒரு வார நாளேடுகளைப் பார்த்தாலே தெரிய வருமே!!!!!
[2]
இன்னோரு விஷயம் அப்படீன்னா மாறன் தனது தாத்தாவுக்கு புத்தி சொல்லவே இல்லையா?
[3]
நீங்க 600 கோடி கொடுத்து அமைச்சர் பதவி வாங்கியதாக ஒரு டேப் வெளியானதே அதைப் பற்றி பேசவே மாட்டேங்குறீங்களே?
No comments:
Post a Comment