ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்தல், புதிய புத்தகங்கள் வெளியாக உதவுதல், பதிப்புரிமை பெறுதல் போன்ற செயல்களை ஊக்குவிக்க இந்த புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23-ம் தேதியை புத்தக தினமாக அறிவித்தது. ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள் 1616, ஏப்ரல் 23-ம் தேதி மறைந்தனர். இலக்கியத்தில் நீங்கா இடம்பெற்றுள்ள இவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.
அதன்படி கடந்த 1995-ம் ஆண்டு முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன.
2 comments:
சரிங்க...நூலக தினம்,புத்தக தினம் எல்லாம் ஓகே. இந்த 365நாளுக்கும், என்னென்ன தினம் என்று சீக்கிரமே ஒரு டயரி வந்துடும்னு நினைக்கிறேன்!!
-ரோமிங் ராமன்
புதிய புத்தகங்கள் வெளியாக உதவுதல், பதிப்புரிமை பெறுதல் போன்ற செயல்களை ஊக்குவிக்க இந்த புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
பாராட்டத்தக்க பணிக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment