நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Sunday, April 10, 2011

"பிற(ர்)" சாரம்


இந்தத் தேர்தல் குறித்து நமக்கு வாசகி  சந்திரா ராபர்ட் அனுப்பியுள்ள கட்டுரை!! இவர் ஒய்வு பெற்ற பேராசிரியை  (எந்தத் தொகுதி/ பகுதி  என்று கேட்டு மெயில் அனுப்பி இதுவரை பதிலில்லை!!)

"பிற(ர்)" சாரம்

 தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து உச்சக் கட்டத்தைத் தாண்டி இறுதி கட்டத்தை அடைந்தும் விட்டது. வழக்கமான பிரச்சாரங்களை விட கூடுதலாக பிறர் பற்றிப் பேசிய சாரம்தான் அதிகம்!!

     தி மு க இந்தத் தேர்தலில் காமெடிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்து விட்டது.ஆரம்ப கட்டங்களில் தனது சாதனைகளாக ஒரு ரூபாய் அரிசி,இலவச டிவி, இலவச 108 ஆம்புலன்சு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம்  என்று தொடங்கிய தி மு க , எதிரணியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில்கள் இல்லாததாலோ என்னவோ, வடிவேலுவை வைத்து  அவரது கவர்ச்சியை நம்பி, முன்னிலைப் படுத்தி இறங்கியது!! 

      அவரும் ஒருவேளை நாளை வேறு ஆட்சி அமைந்து விட்டால் காப்பாற்றிக்கொள்ள வசதியாக இருக்கட்டும் என்று, தன்னை அழகிரியும் ஸ்டாலினும் தான் அழைத்து வந்துள்ளதாக ஒரு வாக்குமூலம் கொடுத்து விட்டு தொடங்கினார். ஆனால் வடிவலுவை வைத்துக்கொண்டு தி மு க முழுக்க முழுக்க விஜயகாந்த்தை தாக்கவே திட்டம் வகுத்துக்கொடுத்தாகத் தெரிகிறது. அத்தனையும் தனிமனித விமர்சனம் மட்டுமே ... ஆனால் படு கேவலமாக இருந்தது. கூடவே கலைஞர் டிவியும், சன் டிவியும் முடிந்த மட்டும் விஜயகாந்த்தின் பேச்சுக்களை டப்பிங், எடிட்டிங் எல்லாம் செய்து எதிரணியின் சானல்களை விட அதிகமாக அவர்களைக் காட்டி விளம்பரம் கொடுத்ததன!!  இந்த விஷயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது வடிவேலுவின் பிரச்சாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஏனைய கூட்டணி கட்சியினரை எரிச்சலிலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

       தி மு க மீது சாட்டப்படும் குற்றச் சாட்டுகளான விலைவாசி கட்டுப்பாடின்மை,குடும்ப ஆதிக்கம், மின் வெட்டு , கட்டுப்பாடில்லாத அன்றாட வன்முறை,ஸ்பெக்ட்ரம் ஊழல் .... போன்ற எதற்குமே நேரடியான விளக்கங்கள் இடம் பெறாதது ஏமாற்றமே!!  பெரும்பாலான அமைச்சர்களையும் , தி மு க முக்கியப் புள்ளிகளைகளையும்  பிரசாரங்களில் காண முடியவில்லை. வடிவேலுவை பிரதானப் படுத்தி ஒரு "லைவ் காமெடி ஷோ " மட்டுமே நடத்த முடிந்தது! உச்ச பட்ச காமெடி முதல்வர் அதி முக்கிய  தேர்தல் பிரசாரத்தில், பொன்னர் சங்கரைத் தொடர்ந்து தீரன் சின்னமலை படத்தில் பணியாற்றுவேன் என்றது!! இது என்ன மக்கள் நலத்திட்டமோ தெரியவில்லை!  மற்ற கட்சிகள் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை வரவேற்கும் போது ஏனோ கலைஞர்  மட்டும் தேர்தல் கமிஷனையும் பாவம்  ஒரு எதிர்க் கட்சியாக நினைத்து கடும் விமர்சனங்களை  அள்ளி விடுகிறார்.
        அதைவிட, கூட்டணிக் கட்சிகள் பற்றியோ அவர்களின் பிரச்சாரம் பற்றியோ கூட அவர்கள் பெரிதாக முக்கியத்துவம் தரவே இல்லை. தங்கள் தொலைக் காட்சிகளில் கூட!! "ஆறாவது முறை " கலைஞர் முதல்வராக வேண்டும் என்பது மட்டுமே focus செய்யப் பட்டது தவிர்த்து பிரகாசமான எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவரங்கள் இல்லை. அதனால் முழுக்க முழுக்க எதிர்க் கட்சி கூட்டணி பற்றிய தனி மனித தாக்குதல்கள், விமர்சனங்கள் தவிர பெரிதாக எதுவும் இல்லாதது சோபிக்கவில்லை!!
       
       அ தி மு க அணியும் எதிர்க் கூட்டணியை விமர்சிப்பதில் குறை ஒன்றும் வைக்கவில்லை.  வடிவேலுவுக்கு எதிராக சிங்க முத்துவை களம் இறக்கி வேடிக்கை காண்பித்தனர். ஆனால் இவர்களிடம் தி மு க வின் கேள்விகளுக்கு சரியான கவுன்ட்டர் இருந்தது. கூட்டணிக் கட்சிகளுடன் மிக நல்ல இணக்கமான போக்கினைக் காண்பித்தது, ஜெ வின் (கடந்த கால ??) அனுபவ முதிர்ச்சியைக் காண்பித்தது. மேலும் சொந்த சானல் இல்லாத கூட்டணிக் கட்சியினரையும்(தா பாண்டியன், ஜி ராமகிருஷ்ணன்,கிரிஷ்ணசாமி,சரத்குமார், ஜபருல்லா, சேதுராமன் போல )  நன்றாக கவர் செய்தது! கேப்டன் பிரச்சாரத்துக்கும் தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது!!  ஜெ டிவியோ சரியாகத் திட்டமிட்டு செயல் பட்டது என்றே தோன்றுகிறது. கடைசிக் கட்டத்தில், முன்னாள் கூட்டணியினரின் (திருமா, ராமதாஸ், வடிவேலு) பழைய பேச்சுக்களையும், இன்றைய பேச்சுக்களையும் சரியாகத் தொடுத்து "அன்றும் இன்றும்" என்று காட்டுவது புத்திசாலித்தனம். ஜெ வின் பிரச்சாரத்திலும் எதிரணி பற்றிய காட்டமான விமர்சனமே பிரதானமாக இருந்தது. ஆனாலும் எல்லை மீறவில்லை!!  மேலும் புத்திசாலித்தனமாக, கடைசி கட்டத்தில் தன்னுடைய ஆட்சியின் கடந்த கால சாதனைகளை பட்டியலிட்டது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜெ வின் பேச்சில் இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ் நாட்டைத் தாண்டியும் தேச நலன் பற்றிப்  பேசிய தொலைநோக்குப் பார்வை குறிப்பிடத்தக்கது. அ தி மு க கூட்டணி இந்தப்  பக்கம்  எதிர்க் கட்சிகளின் ஊழல், கறுப்புப் பணம், என்று கத்திக்கொண்டிருக்கையில், அன்னா ஹசாரே ஒரு பக்கம் உண்ணாவிரதம் இருந்தது கூடுதல் பலம் சேர்க்குமோ என்னவோ ?? தேர்தல் கமிஷன் விஷயத்தில் கூட ஜெ சரியான அணுகுமுறையைக் கையாள்கிறார் என்றுதான் தோன்றுகிறது. 

        இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷனால் பிடிக்கப் பட்டிருப்பது மட்டுமே கிட்டத்தட்ட நாற்பது கோடிக்கு வந்து விட்டது. பிடிபடாதது எவ்வளவோ?? ஆக நம்மூரில் பணம் நிறைய இருக்கிறது என்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

       எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை,, கலைஞர் தேர்தல் கமிஷன் மீது கொண்டிருக்கும் கோபம், பத்திரிகைகளின் கருத்துக் கணிப்புகளுக்குப் பின் மேலும் கூடியிருக்கிறது. 

இன்னொரு விஷயம், கணிப்புகளுக்குப் பின் ஜெ முகத்தில் பூரிப்பும் கலைஞர் முகத்தில் கவலையும் நன்றாகத் தெரிகிறது!! 

 குழம்பிய குட்டை


 தெளிந்த நீரோடை


           எப்படி இருந்தாலும் இந்தத் தேர்தலில் தன சாரத்தைப் பேசியதை விட எதிர்க் கட்சிகளின் பிற சாரத்தைப் பற்றி தான் அதிகம்!!

- சந்திரா ராபர்ட்.

2 comments:

அமுதப்ரியன் said...

அருமையான கட்டுரை...

நானும் எழுதி அனுப்பலாமா?

அமுதப்ரியன்.

Anonymous said...

பேராசிரியை அம்மணி, மற்றும் ஜெ அம்மணி இருவரும் கவனிக்காத ஒரு சமாசாரம் இருக்கு__ பிரச்சாரத்தில் டி ஆர் பாலு ,சேது சமுத்திரம் பழைய அமைச்சர்கள் பற்றியெல்லாம் மறந்து விட்டார்கள்...