நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, April 11, 2011

வைகோவுக்கு ஒரு மனம் திறந்த மடல்

நமது வாசகர் திரு.அமுதப்ரியன் அவர்கள் வைகோவிற்கு எழுதியுள்ள கடிதம்.

கடந்த 15 வருடங்களாக நான் திரு.வைகோ அவர்களை கவனித்து வருகிறேன். 


கொண்ட கொள்கையில் உறுதியான நேர்மையும், சிம்ம குரலாக தனது குரலை எடுத்து வைக்கும் திறமும், யாருக்கும் அஞ்சாத வீரமும் கொண்டவர். அதிமுகவுக்காக கடந்த 5 வருடங்களாக கிட்டத்தட்ட கொ.ப.செவாகவே ஆகிப்போனது மதிமுக. யார்க்கும் யாரும் சளைத்தவரில்லை என்ற போக்கு உடைய திமுக அதிமுக தலைமையிடம் ஏமாந்து போனார் வைகோ. அவருடைய ஆளுமைத்திறமும், தமிழும் இங்கு தமிழ்நாட்டில் யாரும் அவருக்கு நிகரில்லை எனலாம். 

தற்போதைய சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் மதிமுகவை நடத்திய விதம் அனைவருக்குமே மனசஞ்சலத்தை ஏற்படுத்தியது எனலாம். அந்தளவுக்கு கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். அடுத்த வரும் தேர்தல்களில் நிச்சயம் மதிமுக மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது நடந்து வரும் சூழல் என்னைப் போன்ற நடுநிலையாளர்களின் கருத்துகளுக்கு சம்மட்டி அடிப்பது போல இருக்கிறது. முதலில் வைகோ அவர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். அவரது முடிவு சரியானதுதான் என அப்போதைய சூழல் எடுத்துரைத்தது. அனைத்து தமிழ் மக்களுக்கும் வைகோவின் தைரியத்தின் மேல் மரியாதை பிறந்தது. இந்த தைரியம் தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற கட்சியினருக்கு உண்டா என்பது தெரியவில்லை. இப்போது சில இடங்களில் வைகோவின் கட்சியினர் சிலர் சிற்சில இடங்களில் சோரம் போக துவங்கியுள்ளனர். இது வைகோ அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் செய்யும் செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் மதிமுகவின் கொள்கைப்பரப்புசெயலாளர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தலைமையில் சிற்சில இடங்களில் பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த பட்டிமன்றங்களில் அதிமுகவை சாடி கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. 


இதுவும் அவர்களுக்கான உரிமைதான். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவாக சில இடங்களில் மதிமுக தொண்டர்கள் சிலர் வேலை செய்யத் துவங்கியுள்ளதுதான் என்னைப் போன்ற தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் தேசியம் என்பதுதான் மதிமுகவின் தலையாய கொள்கை என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவை பழி வாங்க ஈழத்தில் நடந்த வன்கொடுமைகளுக்கு காரணமான காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதும், ”கை” கட்டி வாய் மூடி மௌனியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. 
 
மேலும் 

விண்ணை முட்டும் விலைவாசி கடும் உயர்வு,
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு,
ஊழலில் கின்னஸ் சாதனையான 2G,
கனவாகி போன 2 ஏக்கர் நிலம்,
மணல் திருட்டு,
அரிசி திருட்டு,
நதிநீர் பிரச்சனைகளில் முடிவெடுக்க தைரியம் இல்லாமை,
ரவுடிகளின் ராஜ்ஜியம்,
தா.கிருட்டிணன் (தற்)கொலை செய்து கொண்டது,
மூன்று பத்திரிகையாளர் சகோதரர்கள் தங்களை தாங்களே மாய்த்து கொண்டது,
சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்கறிஞர்கள் மீதும், நீதிபதிகள் மீதும் நடத்திய சர்க்கஸ் விளையாட்டு,
தன் குடும்ப போற்றுதலுக்காக செம்மொழி மாநாடு நடத்தியது,
மாநாட்டுக்கு வராமல் போனவர்கள் ஒரு தகப்பனுக்கு பிறக்கவில்லை என ஆசிர்வாதம் செய்தது,
ஈழப்பிரச்சனைகளை நீர்த்து போக செய்தது,
ஈழத்தில் நமது உறவுகள் மாய்ந்து கொண்டிருக்கும் போது அமைச்சரவை பங்கீட்டில் அனாயசமாக ஈடுபட்டது,

போன்ற என்னற்ற சாதனைகளால் திக்குமுக்காடி போயிருக்கும் தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உங்கள் கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் தெரிவிக்கப் போவது என்ன?

இதெல்லாம் போகட்டும்.

ஈழத்தில் நடந்த கொடூரங்களை மனிதனாக பிறந்த யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியுமா?

ராஜபக்‌ஷேவே இந்தியா தான் எங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது என்று அறிவித்ததையும், அந்த காங்கிரஸை உங்கள் தொண்டர்கள் ஆதரிப்பது முறைதானா? சரிதானா?

நீங்கள் ஊழலுக்கு எதிரானவர் என்பது அனைவருக்குமே தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன் அன்னா ஹஸாரே என்றொரு கல்கி அவதாரம் உண்ணாவிரதம் இருந்தாரே, அதற்காவது உங்கள் ஆதரவை தெரிவித்தீர்களா?(அது சரி உங்களை சொல்லியும் குற்றமில்லை. மாப்பிள்ளை படத்திற்கு க்யுவில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்தும், ஐபிஎல் போட்டிக்கு க்யுவில் நின்று பார்த்தும் நேரம் செலவழிக்கும் மக்கள்தானே நாங்கள்)

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கலாமா? வேண்டாமா? என நீங்கள் சொன்னால் போதும். இன்னும் 24 மணி நேரங்கள் இருக்கின்றன.

இனி முடிவு உங்கள் கையில்....

அமுதபிரியன்.

3 comments:

துளசி கோபால் said...

அருமையான அரசியல் கட்டுரைகள்!!

பகிர்வுக்கு நன்றி.

என்னதான் கரடியாக் கத்திப் பிரச்சாரம் செய்தாலும் கடைசியில் 'இலவசம்' முன்வந்துருமோன்னு அச்சமா இருக்கு:(

je-priyan said...

மனதில் இருப்பதையெல்லாம் கட்டுரை ஆசிரியர் கொட்டி இருக்கிறார்!! அவரது தேசநலன் குறித்து நன்றாக தெரிகிறது! ஆனால் கடிதம் வைகோ வுக்கு என்று தொடங்கி மக்களிடம்தான் பேசி இருக்கிறார் இவர்!! எதற்காக "கை" யை நீட்டுகிறார் என்றுதான் புரியவில்லை!!

தமிழ் உதயம் said...

கலைஞருக்கு பிறகு வரும் வெற்றிடத்தை - வை.கோ தனது சாதுர்யத்தால் கைப்பற்ற ஒரு வாய்ப்பு இருந்தது. கிடைத்த தொகுதிகளை வாங்கி கொண்டு, கடும் உழைப்பில் வெற்றி கொண்டு - அடுத்து வரும் ஆட்சிகளின் தவறை சுட்டி காட்டி தமிழக மக்களின் பார்வை தன் மீது திரும்ப கிடைத்த ஒரு வாய்ப்பை பறி கொடுத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.