நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Thursday, April 14, 2011

தேர்தல் வெற்றிக் கூட்டணி அறிவிப்பு!!! - ரோமிங் ராமன்

  இந்தக் கட்டுரை ஆசிரியர் சதா பைக்கில் சுற்றிக்கொண்டிருப்பதால் "ரோமிங்" ராமன்.நிறைய  தளங்களில் பின்னூட்டங்கள்  எழுதுபவர். தேசபக்தி மிகுந்தவர்.  நாட்டைப் பற்றி  நிறைய அக்கறை உடையவர்.- இவர் நமக்கு அனுப்பியுள்ள கட்டுரை!!   

            "இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு  நடந்த நிகழ்வுகள் 
            எங்களை  உலுக்கி விட்டன .  இந்த நாட்டின் தலைவர்களை
            விட எங்களுக்கு தேச பக்தி அதிகமாக உள்ளது. இந்த தேசத்தின்
            எதிர் காலம் நன்றாக இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?" 

        ஈரோட்டைச் சேர்ந்த ராஜா கதிரவன் என்ற வாசகர், துக்ளக்கின்

        41 ம்  ஆண்டு விழாவில் முதல் கேள்வியாகக் கேட்டதற்கு, ஆசிரியர்  
       அவர்கள்,
   
         " பொறுப்பானவர்கள் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை! 
                        அவர்கள் வாக்களித்தாலே நாட்டிற்கு நன்மைகள் நடக்கத்
தொடங்கி விடும்"  என்று  பதிலளித்தார்! 
        
          இந்தத் தேர்தலில் அலறும (பெரிய) பிரச்சாரங்கள் இல்லை!! வீதிக்கு வீதி கட-அவுட்டுகள்,தோரணங்கள்  இல்லை!! பொய்களைப் பரப்ப பிளக்ஸ் பேனர்கள் இல்லை!! சுவர் விளம்பரங்கள்  இல்லை. தமிழ் நாட்டுக்கு அவப்பெயரைத் தேடித்தந்த "திருமங்கலம் பார்முலா" வை பெரிய அளவில்  செயல் படுத்த முடியவில்லை. பெரிய அளவில் மோதல்களும், கள்ள வோட்டும் இல்லை!!


           
  (ஆட்சி அமைக்கும் அரசும் இந்த கட்-அவுட்,பேனர்,தோரணம் எல்லாம் முதலிலேயே தவிர்த்தால், ஆரம்பத்திலிருந்தே நல்ல பெயர் சம்பாதிக்கலாம்!)

          திருமங்கலம் பார்முலா வை முறியடிக்க, தேர்தல் கமிஷன் பட்ட பாடு சாதாரணமானதல்ல.-இரவில் மின்வெட்டு கூடாது என்று கூட ஒரு ஆணை   பிறப்பிக்கப் பட்டது!!! தேர்தல் கமிஷனின் உறுதியான நடவடிக்கைகளால் 34 கோடி ரூபாய் பணமும  13 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் கைப் பற்றப்பட்டு,  5.18 கோடி ரூபாய் மட்டும் சரியான  ஆவணங்களைக் காட்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனும், அதன் அதிகாரிகளும் மக்களின் நம்பிக்கையையும், நன்-மதிப்பையும் பெற்றுள்ளனர். ஆனால்,தேர்தல் கமிஷனின் (நியாயமான ) கடும்  நடவடிக்கைகள் கலைஞரை, "நான் முதல்வராக இருக்கிறேனா இல்லையா" என்றே தெரியவில்லை என்று புலம்ப வைத்து விட்டது. ஸ்டாலினும் தன் பங்குக்கு தேர்தல் கமிஷனை முடிந்தவரை சாடினார். ப சிதம்பரம் ஒரு படி மேலே போய், தேர்தல்  என்பது திருமண வீடு போல இல்லாமல், வேறு வீடு  மாதிரி ஆகிவிட்டது என்று அழுதார். திமுக கூட்டணி தவிர்த்து வேறு யாரும் தேர்தல் கமிஷனை குறை சொல்லவில்லை.
(உட்பொருள்: எங்களுக்கு நீதியும் நேர்மையும் ஒருநாளும் பிடிக்காது - எதுவும் எங்கள் சர்வாதிகார வரம்புக்குள் வரக்கூடாது!)    

         இந்தத் தேர்தலில்  கிட்டத்தட்ட எண்பது சதவீத வாக்குப் பதிவு (சென்ற தேர்தலில் 70.82 சதவீதம்) நடந்திருக்கிறது. மத்திய போலீசின் பாதுகாப்பு,தேர்தல் கமிஷனின் கண்டிப்பான நடவடிக்கைகள் ஆகியன பிரதானமாக சொல்லப் பட்டாலும்,  மக்கள் நல்ல விழிப்புணர்ச்சியோடும் பொறுப்போடும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்  கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சரி. பொதுவாக, விமர்சனம் மட்டும் செய்துகொண்டு வாக்களிக்காத அறிவு ஜீவிகளும் வாக்களித்துள்ளனர் என்று தோன்றுகிறது.      இன்னும் சொல்லப் போனால், paper ballot வந்தால் இன்னும் கூட இவர்கள் நம்பிக்கை அதிகமாகி, இவர்கள் அதிகமாக வெளியில் வரக்கூடும்.  பொதுவாக வாக்குப் பதிவு சதவீதம்  அதிகமானால்,  ஆட்சி மாற்றம் வரும் என்று கூறுவார்கள். அனால் இந்தக் கூற்று பலமுறை பொய்த்தும் இருக்கிறது. ஆனால் நான் அறிந்தவரை, மக்கள் ஆட்சியை  மாற்றத் தயாராகி விட்டார்கள். பல்வேறு கருத்துக் கணிப்புகளை விடவும் கூடுதலான இடங்கள்  அதிமுக கூட்டணி  பெறும் என்று எம் பல்வேறு ஊடக நண்பர்கள் சொல்கிறார்கள்..
         
          இந்த முறை  தமிழகத்தில் மக்கள் தைரியமாக  வந்து, பெரிய வரிசையில் பொறுமையாக நின்று வாக்களித்திருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் வந்து வாக்களித்து விட்டு பெருமையாக விரல் உயர்த்திக் காண்பித்ததே போதாதா?

          பீகாரைத் தொடர்ந்து, மிகச்சிறப்பாக தமிழ்நாட்டில் தேர்தல் நடத்திக் காட்டியிருக்கும் தேர்தல் கமிஷன் பாராட்டுக்குரியது.இதே நேர்மையும், கண்டிப்பும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருக்க வேண்டும்.
   
  வெற்றிக் கூட்டணி : " தேர்தல் கமிஷன் & வாக்களித்த மக்கள் "

                                  

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தேர்தல் நல்ல முறையில் நடந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பாராட்டும்படி இருந்தன. மக்களுக்கும் பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி தான் தெரிகிறது. வாக்குப்பதிவும் நன்றாக இருந்தது. மாற்றம் வரும் போல் தான் தெரிகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

எல்லா அமர்க்களங்களுக்கும் ரிசல்டுக்காக இன்னும் ஒருமாசம் காத்துகிட்டு இருக்கனுமே. எங்கபக்கமும் எட்டிப்பாக்கரது.

ramasami said...

அன்புள்ள 'சகமனிதன்' + நண்பர்களுக்கு,

வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேன், சமயம் கிடைக்கும்போது தொடர்ந்து படிப்பதாகவும் இருக்கிறேன்.

மன்னிக்கவும் - தேர்தல் நாளில் அலையோ அலை என்று அலைந்ததால், உங்களுக்கு பதில் / பின்னூட்டம் உடனே அளிக்கமுடியவில்லை. (எப்படியோ தமிழர்களுக்கு (உலகத்துக்கும்) விடிவு வந்தால் சரி...)

உங்கள் பணியைத் தொடரவும். தமிழகத்தை, தமிழை மீட்டெடுப்பது என்பது நாம் அனைவரும் செய்ய வேண்டிய தலையாய பணிகளில் ஒன்று நான் நினைக்கிறேன்...

நன்றி!

பாச மலர் / Paasa Malar said...

ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன...குணாதிசயங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியிருக்கும்போது...