பஸ் வசதி கேட்டு 15 வருடங்களாக போராடிய மக்களுக்கு மனு பெற்ற மூன்றே நாட்களில் தீர்வு ஏற்படுத்தினார் அமைச்சர் வேலுமணி.
வடிவேலாம்பாளையம்
கோவை தொண்டாமுத்தூர் அருகே வடிவேலாம்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதி மக்கள் அருகிலுள்ள முகாசிமங்கலம், காளிமங்கலம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று வர கடந்த 15 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை. இதற்காக அவர்கள் தொடர்ந்து மனுக்கள் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் வந்தனர். எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அமைச்சரிடம் கோரிக்கை
இந்நிலையில், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.,வும், மாநில சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சருமான வேலுமணி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வடிவேலாம்பாளையம் வந்தார். இப்பகுதி மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து மனு அளித்தனர்.
மூன்றே நாளில் அதிரடி
மூன்றே நாட்களில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. தற்போது மக்கள் கேட்ட வழித்தடத்தில் 59டி/ஈ என்ற நம்பருள்ள பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. புதிதாக இயங்கத் துவங்கியுள்ள இந்த டவுண் பஸ் காந்திபுரம் - காளிமங்கலம் இடையே 4 முறையும், காந்திபுரம் - மோளாபாளையத்துக்கு இடையே 4 முறையும் இயக்கப்படுகிறது.
3 comments:
இதே வேகம் எல்லா நலத் திட்டங்களிலும் இருந்தால், தமிழ்நாட்டுக்கு நல்ல காலம்தான்!
பாரட்டவேண்டிய செய்தி
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2241.html
Post a Comment