நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, May 16, 2011

பஞ்ச் பாலா

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இவ்வளவு சாதனைக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவா என கேட்கின்றனர் பல நண்பர்கள். ஈ.வெ.ரா., 1933லேயே, "குடியரசில்' எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்கு தக்க பதில் கிடைக்கும். "நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு. உதவி செய்தவர்கள் எதிர்பார்த்தால், அது சிறுமை குணம்!'.

பஞ்ச் பாலா: தமிழக மக்களே நீங்க செய்த சாதனைகளுக்காகத்தான் நன்றியே தங்களது ஓட்டுரிமை மூலமா தெரிவிச்சிருக்காங்களே!!!!!!

மதுரை அவனியாபுரத்தில் பிரவீண் குமார் படத்திற்கு பாலாபிஷேகம்


சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் படத்திற்கு அவனியாபுரத்தில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. 



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு ஏராளமான மக்கள் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் சில கட்சிகள் கடுப்பாகி தேர்தல் ஆணையம் சர்வாதிகாரி போன்று செயல்படுவதாகக் குற்றம்சாட்டின.

பணப்பட்டுவாடா செய்வது பெரும்பாலும் தடுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தலையும், வாக்கு எண்ணிக்கையையும் நடத்தியது. இதனால் தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதையடுத்து மதுரை அவனியாபுரத்தில் பணப் பரிவர்த்தனை குறைதீர் விழிப்புணர்வு குழுமத்தின் அவனியாபுரம் கிளை சார்பில் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டது. அதில் அவனியாபுரம் பகுதி இளைஞர்கள் மற்றும் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சேர்ந்து பாலாபிஷேகம் செய்தனர். வழக்கமாக நடிகர், நடிகைகளுக்குத் தான் பாலாபிஷேகம் செயவார்கள். தற்போது ஒரு அரசு அதிகாரிக்கு செய்து கௌரவப்படுத்தியுள்ளனர். 

பஞ்ச் பாலா: 
பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்। 
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே॥

முதன்முதலாக பேரவைக்கு செல்லும் சினிமா பிரபலங்கள்


நடிகர்கள் சரத்குமார், அருண்பாண்டியன் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பேரவைக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக பெற்றுள்ளனர். ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் முதல் முறையாக சட்ட சபைக்கு செல்கிறார். அகில இந்திய மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் தே.மு.தி.க சார்பில் நடிகர் அருண்பாண்டியன் மற்றும் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மூவரும் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்கள். கடந்த முறை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க சார்பில் எஸ்.வி. சேகர் ஆகியோர் பேரவைக்கு சென்றனர்.

ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அருண் பாண்டியன். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது ஐங்கரன் மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார். விஜயகாந்துக்கு ஆரம்ப கால நண்பரான இவர், பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டார். 


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் தொழிலதிபர் ஆவார். இவர் நாடோடிகள், சிந்து சமவெளி, ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட இவர், இப்போது ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர்கள் - ஒரு பார்வை


பழைய அமைச்சர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்காமல் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் முதல்வர் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா.

தன்னையும் சேர்த்து 34 பேரைக் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை நேற்று ஜெயலலிதா வெளியிட்டார்.

ஜெயலலிதா தவிர்த்து உள்ள 33 அமைச்சர்களில் 9 பேர் மட்டுமே பழைய முகங்கள் ஆகும். மற்ற 24 பேரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழையவர்களை விட புதியவர்களையே அதிகம் நியமிப்பது ஜெயலலிதா ஸ்டைல். எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, புதியவர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து ஊக்குவிப்பார் ஜெயலலிதா.

அந்த வகையில் இந்த முறையும் அவரது அமைச்சரவை முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது.

ஜெயக்குமார், வளர்மதிக்கு இடமில்லை

பழைய முகங்கள் என்று பார்த்தால் ஓ.பி.பன்னீர்செல்வம், கேஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விஸ்வநாதன், சண்முக வேலு, ஆர்.வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், எஸ்.வி.சண்முகநாதன், எம்.சி.சம்பத், சி.கருப்பசாமி ஆகியோர்தான் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் ராசி எண் 9 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயக்குமார், பா. வளர்மதி ஆகிய பழைய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல நயினார் நாகேந்திரன் போன்ற சீனியர்களுக்கும் இடம் தரப்படவில்லை.

24 புதுமுகங்கள்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.பழனியப்பன், செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, கே.டி.பச்சமால், வி.செந்தில் பாலாஜி, எஸ்.வி. வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, இசக்கி சுப்பையா, ஜி.செந்தமிழன், கோகுலஇந்திரா, ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.வி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், என்.மரியம் பிச்சை, புத்தி சந்திரன், எஸ்.டி.செல்லப்பாண்டியன், டாக்டர் வி.எஸ்.விஜய், என்.ஆர். சிவபதி, ஜெயபால், கே.பி. முனுசாமி, கே.வி.ராமலிங்கம் ஆகிய புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

சபாநாயகரை வீழ்த்தியவர் சட்ட அமைச்சர்

கடந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனை அம்பாசமுத்திரத்தில் வீழ்த்திய இசக்கி சுப்பையாவுக்கு சட்ட அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

கரூரில் வென்ற செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துத் துறையைக் கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் வென்ற கோகுல இந்திராவுக்கு பதவி கிடைத்துள்ளது. இவர் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லூர் ராஜு அமைச்சர்

மதுரை மேற்குத் தொகுதியைச் சேர்ந்த செல்லூர் ராஜுக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதேபோல சேவல் சின்னத்திலிருந்து அதிமுகவில் ஜெயித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த முறை அமைச்சர் பதவி கொடுத்துக் கெளரவித்துள்ளார் ஜெயலலிதா.

சைதாப்பேட்டையில் வென்றவரான செந்தமிழன் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராகியுள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு இடம்

கலசப்பாக்கத்தில் வென்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் முதல் முறையாக அமைச்சராகிறார்.

புதிய அமைச்சர்களில் பி.வி.ரமணா திருவள்ளூரில் வென்றவர்.

தாம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற சின்னையாவும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

ஞானசேகரனை வீழ்த்தியவருக்கு அமைச்சர் பதவி

வேலூர் தொகுதியில் காங்கிரஸ் ஜாம்பவான் ஞானசேகரனை வீழ்த்தி வெற்றி பெற்ற டாக்டர் வி.எஸ். விஜய்க்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவருக்கு சுகாதாரத்துறை என்ற முக்கியமான துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

அமைச்சராகியுள்ள தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவராவார்.

ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றவரான கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப் பணித்துறை என்ற மிக முக்கியமான துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

உதகமண்டலம் தொகுதியில் வென்றவரான புத்தி சந்திரனுக்கும் அமைச்சர் பதவி அதிர்ஷ்டம் கை கூடி வந்துள்ளது.

இன்னொரு புதுமுக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதிக்குப் பக்கத்துத் தொகுதியான திருச்சி மேற்கிலிருந்து வென்றவரான மரியம் பிச்சைகும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

கந்தர்வக்கோட்டையிலிருந்து வென்றவரான என்.சுப்பிரமணியனும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

முசிறி தொகுதியில் வென்ற என்.ஆர்.சிவபதியும் அமைச்சராகியுள்ளார்.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள செல்வி ராமஜெயம், புவனகிரி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர் ஆர்.பி.உதயக்குமார். சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான உதயக்குமார் இப்போது முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

தூத்துக்குடியில் வென்றவரான செல்லப்பாண்டியனுக்கும் அமைசச்ர் பதவி கிடைத்துள்ளது.

சங்கரன் கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றவரான கருப்பசாமியும் முதல்முறையாக அமைச்சராகியுள்ளார்.

கடைக்கோடி கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். இவரும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்ற பி. பழனியப்பனும் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

3 பெண்கள்

ஜெயலலிதா அமைச்சரவையில் அவரையும் சேர்த்து மொத்தம் 3 பெண்களுக்கு இடம் தரப்பட்டுள்ளது.

கோகுல இந்திரா மற்றும் செல்வி ராமஜெயம் ஆகியோர் அந்த அமைச்சர்கள்.

இதுவரை இல்லாத பெரிய அமைச்சரவை

இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அமைச்சரவையை அமைத்துள்ளார் ஜெயலலிதா. இதுவரை தமிழகத்தில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை

தமிழக சட்டசபையில் கடந்த முறையை விட இந்த முறை பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

ஆண்டுக்கு ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது 22 பெண் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தற்போது 14 ஆக குறைந்து விட்டது. இவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்.

இந்த ஆண்டு அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் 136 பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அவர்களில் 14 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், 2006ம் ஆண்டு தேர்தலின்போது 156 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் பெண்களின் பங்கு வெறும் 5 சதவீதம்தான்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 பெண்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் - கோகுல இந்திரா, ராஜலட்சுமி மற்றும் பா. வளர்மதி. மூவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

பெரிய கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுக சார்பில், ஜெயலலிதா உள்பட 9 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே வென்றுள்ளனர்.

திமுக சார்பில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்களில் புஷ்பலீலா ஆல்பன் மட்டுமே வென்றுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் நிறுத்தப்பட்டு விஜயதரணி மட்டுமே வென்றுள்ளார்.

சிபிஎம் சார்பில் பாலபாரதி மட்டும் நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.

Saturday, May 14, 2011

நள்ளிரவு முதல் 5 ரூபாய் உயருகிறது பெட்ரோல் விலை


பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.


இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய். 

"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.


பஞ்ச் பாலா: டேய் பேசாம ரவுண்டா 100 ரூபாய் ஆக்கிடுங்கடா? சில்லரை பிரச்சனை வராது. 

திருமலையில் மட்டும் பக்தர்கள் அலைமோதுவது ஏன்?


திருமலை என்பது ஏழு சிகரங்களை உள்ளடக்கிய ஒரு மலை. ஏழு சிகரங்களும் ஆதிசேஷனின் ஏழு தலைகளாகக் கருதப்படுகின்றன. ஏழு சிகரங்களுடன் கூடிய திருமலை சுருண்டு கிடப்பது போன்ற ஒரு தோற்றத்துடன் விளங்குவதால், ஆதிசேஷனே மலை வடிவில் சுருண்டு கிடப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.



இது இப்படியிருக்க... சாளக்கிராமம் என்னும் கல் இயற்கையில் கிடைப்பது. மிக அரிதானது. இயற்கையில் கிடைக்கும் இந்தக் கல்லில் சக்தி சக்கரம் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட கற்கள், இறை குடிகொண்டுள்ள மிகச் சக்திவாய்ந்த கற்கள். இந்தக் கற்களை ஆலயங்களில் பூஜையில் வைத்து வணங்குவர்.



திருப்பதியின் ஏழு மலைகளும் ராட்சத சாளக்கிராமக்கற்களே. இம்மலையில் எந்த இடத்தை வெட்டிப் பார்த்தாலும் வெட்டப்பட்ட இடங்களில் சக்கர அமைப்பு இருப்பதைக் காண முடியும். சாளக் கிராமக்கல்லை வெட்டிப் பார்த்தால், அதன் உள்ளும் சக்கர அமைப்பு இருப்பதைக் காணலாம்.திருப்பதி மலையேறும்போது, சாலை போடுவதற்காக ஆங்காங்கே வெட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.



இந்த வெட்டுகளில் எல்லாம் சக்கர அமைப்பு அமைந்திருப்பதையும் காணலாம். ஆக, திருமலையே ஒரு சாளக்கிராமக்கல் என்பதால் மிகவும் சக்தி படைத்ததாக அது அமைந்திருக்கிறது. அதன் காரணமாகவே, அது அகில மக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இப்படிப்பட்டதொரு புண்ணிய ஸ்தலமாக இது இருப்பதால், மக்கள் மறுபடி மறுபடி இந்த மலையை நாடி வந்து ஆனந்தம் அடைகிறார்கள்.



திருமலையானது ஒரு சாளக்கிராமக்கல் என்பதால் தான், இதன் புனிதம் கருதி ஸ்ரீராமானுஜர் மலைமேல் தன் பாதம் பதித்துச் செல்ல விரும்பவில்லை. அதனாலேயே அவர் மலையேறி  வெங்கடாசலபதியைத் தரிசிக்காமலேயே இருந்தார். பின், இறுதியில் தன் முழங்கால்களைப் பதித்து, ஊர்ந்து ஊர்ந்தே திருமலை ஏறி வெங்கடாசலபதியைத் தரிசித்தார். 

 -- பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

பஞ்ச் பாலா

பத்திரிகை செய்தி: சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சியினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தங்கபாலு ஆதரவாளர்களுக்கும் - இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பஞ்ச் பாலா: எந்த தேர்தல் வந்தாலும் காங்கிரஸின் இந்த முடிவு மட்டும் மாறுவதேயில்லை

ஓட்டு வித்தியாசம்


அதிக ஓட்டு வித்தியாசம்:
திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.எம்., ஆனந்தன் (1,13,640), எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் கோவிந்தசாமியை (40,369) விட 73,271 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதுவே இந்த தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசம்.

குறைந்த ஓட்டு வித்தியாசம்:
எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி (51,722), எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் பரிதி இளம்வழுதியை (51,570) விட 202 ஓட்டுகள் மட்டுமே கூடுதல் பெற்று வெற்றி பெற்றார். இதுவே இத்தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசம்.

கட்சிகளின் வெற்றி சதவீதம் :
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளின் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் வெற்றி சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் பெரும் பின்னடவை சந்தித்துள்ளன. அ.தி.மு.க.,; 91.875 சதவீதம், தே.மு.தி.க.,68.29 சதவீதம், தி.மு.க., 19.32 சதவீதம் ,காங்கிரஸ் : 7.93 சதவீதம், பா.ம.க.,10 சதவீதம்.

பஞ்ச் பாலா


குஷ்பு:திமுக அடைந்த தோல்வி, மக்களுக்கு கிடைத்த தோல்வி.


பஞ்ச் பாலா: அது சரி இதையெல்லாம் நீங்க சொல்லி நாங்க கேட்கணும்ங்கறதுதான் எங்க தமிழ்நாட்டின் தலையெழுத்து.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்

தி.மு.க

1. திருவாரூர்
2. குன்னூர்
3. பத்மநாபபுரம்
4. திருச்சுழி
5. கம்பம்
6. சேப்பாக்கம்
7. திருச்செந்தூர்
8. பாளையங்கோட்டை
9. காட்பாடி
10. திருவிடைமருதூர்
11. லால்குடி
12. கும்பகோணம்
13. அரவக்குறிச்சி
14. மன்னார்குடி
15. திருவாடானை
16. ஆத்தூர்
17. குன்னம்
18. வேப்பனப்பள்ளி
19. கொளத்தூர்
20. ஒட்டன்சத்திரம்
21. கூடலூர்

காங்கிரஸ்

1. விளவங்கோடு
2. கிள்ளியூர்
3. குளச்சல்
4. பட்டுக்கோட்டை
5. ஓசூர்

பா.ம.க

1. ஜெயங்கொண்டம்
2. செஞ்சி
3. அணைக்கட்டு


அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்

அ.தி.மு.க

  1. ஸ்ரீரங்கம்
  2. ராசிபுரம்
  3. கோவை தெற்கு
  4. அறந்தாங்கி
  5. பழனி
  6. நாகப்பட்டினம்
  7. செய்யூர்
  8. சீர்காழி
  9. குளித்தலை
  10. வீரபாண்டி
  11. கன்னியாகுமரி
  12. கிருஷ்ணராயபுரம்
  13. கிணத்துக்கடவு
  14. தொண்டாமுத்தூர்
  15. அம்பாசமுத்திரம்
  16. தஞ்சை
  17. மதுராந்தகம்
  18. ஒரத்தநாடு
  19. பல்லடம்
  20. உடுமலை
  21. உளுந்தூர் பேட்டை
  22. சங்ககிரி
  23. பூந்தமல்லி
  24. சைதாப்பேட்டை
  25. தியாகராயநகர்
  26. சாத்தூர்
  27. பொள்ளாச்சி
  28. ஈரோடுமேற்கு
  29. ஆலங்குடி
  30. கடையநல்லூர்
  31. நாகர்கோவில்
  32. சோழவந்தான்
  33. அந்தியூர்
  34. பெருந்துறை
  35. மொடக்குறிச்சி
  36. மணப்பாறை
  37. ஊட்டி
  38. விராலிமலை
  39. மேட்டுப்பாளையம்
  40. பூம்புகார்
  41. ஏற்காடு
  42. திருச்சி கிழக்கு
  43. உத்திரமேரூர்
  44. சிவகாசி
  45. ராஜபாளையம்
  46. திருப்பூர் வடக்கு
  47. தாராபுரம்
  48. அவினாசி
  49. துறைமுகம்
  50. ராயபுரம்
  51. ஆர்.கே.நகர்
  52. காஞ்சீபுரம்
  53. கரூர்
  54. நாமக்கல்
  55. சேலம் மேற்கு
  56. குமாரபாளையம்
  57. ஆத்தூர்
  58. திருச்சி மேற்கு
  59. ஜோலார்பேட்டை
  60. திருப்பத்தூர்
  61. கீழ்பெண்ணாத்தூர்
  62. ஆற்காடு
  63. ராணிப்பேட்டை
  64. திண்டிவனம்
  65. திருமயம்
  66. மயிலம்
  67. நத்தம்
  68. தூத்துக்குடி
  69. விளாத்திகுளம்
  70. ஸ்ரீவைகுண்டம்
  71. பவானி
  72. கந்தர்வகோட்டை
  73. கோபி
  74. வில்லிவாக்கம்
  75. மாதவரம்
  76. காங்கேயம்
  77. பல்லாவரம்
  78. திரு.வி.க.நகர்
  79. மயிலாப்பூர்
  80. ஆயிரம்விளக்கு
  81. கவுண்டம் பாளையம்
  82. புவனகிரி
  83. வேதாரண்யம்
  84. நன்னிலம்
  85. இடைப்பாடி
  86. போடிநாயக்கனூர்
  87. ஓமலூர்
  88. மடத்துக்குளம்
  89. திருவையாறு
  90. கோவில்பட்டி
  91. அருப்புக்கோட்டை
  92. மணச்சநல்லூர்
  93. தாம்பரம்
  94. வாசுதேவநல்லூர்
  95. கள்ளக்குறிச்சி
  96. திருமங்கலம்
  97. பாலக்கோடு
  98. முசிறி
  99. சங்கரன்கோவில்
  100. பாபநாசம்
  101. நெய்வேலி
  102. விழுப்புரம்
  103. முதுகுளத்தூர்
  104. பரமக்குடி
  105. துறையூர்
  106. சோழிங்கநல்லூர்
  107. பொன்னேரி
  108. திருவொற்றியூர்
  109. அண்ணாநகர்
  110. ஆவடி
  111. ஸ்ரீபெரும்புதூர்
  112. திருப்போரூர்
  113. கோவை வடக்கு
  114. சிங்காநல்லூர்
  115. மதுரைவடக்கு
  116. ஆலங்குளம்
  117. வேலூர்
  118. காட்டுமன்னார் கோவில்
  119. பாப்பி ரெட்டிபட்டி
  120. வாணியம்பாடி
  121. திருவள்ளூர்
  122. வேளச்சேரி
  123. திருப்பத்தூர்
  124. மதுரை மேற்கு
  125. சங்கராபுரம்
  126. வானூர்
  127. ஊத்தங்கரை
  128. சேலம் தெற்கு
  129. கடலூர்
  130. அரக்கோணம்
  131. மதுரை கிழக்கு
  132. அரியலூர்
  133. பெரம்பலூர்
  134. கிருஷ்ணகிரி
  135. பர்கூர்
  136. அம்பத்தூர்
  137. குறிஞ்சிப்பாடி
  138. ஆண்டிப்பட்டி
  139. நெல்லை
  140. மேலூர்
  141. வேடசந்தூர்
  142. மானாமதுரை
  143. கலசப்பாக்கம்
  144. போளூர்
  145. வந்தவாசி
  146. செய்யாறு
  147. காரைக்குடி
தே.மு.தி.க

  1. ரிஷிவந்தியம்
  2. திருக்கோவிலூர்
  3. விருதுநகர்
  4. செங்கல்பட்டு
  5. திருச்செங்கோடு
  6. விருகம்பாக்கம்
  7. ஈரோடுகிழக்கு
  8. செங்கம்
  9. கெங்கவல்லி
  10. மதுரைமத்தி
  11. சேந்தமங்கலம்
  12. ஆலந்தூர்
  13. திட்டக்குடி
  14. எழும்பூர்
  15. ராதாபுரம்
  16. திருப்பரங்குன்றம்
  17. பண்ருட்டி
  18. மயிலாடுதுறை
  19. திருத்தணி
  20. தர்மபுரி
  21. பேராவூரணி
  22. திருவெறும்பூர்
  23. மேட்டூர்
  24. சேலம் வடக்கு
  25. சோளிங்கர்
  26. விருத்தாசலம்
  27. ஆரணி
சிபிஎம்

  1. கீழ்வேளூர்
  2. மதுரை தெற்கு
  3. பெரம்பூர்
  4. திருப்பூர் தெற்கு
  5. மதுரவாயல்
  6. பெரியகுளம்
  7. திண்டுக்கல்
  8. சிதம்பரம்
  9. அரூர்
  10. விக்கிரவாண்டி
சிபிஐ

  1. திருத்துறைப்பூண்டி
  2. வால்பாறை
  3. குடியாத்தம்
  4. ஸ்ரீவில்லிபுத்தூர்
  5. பவானிசாகர்
  6. புதுக்கோட்டை
  7. சிவகங்கை
  8. பென்னாகரம்
  9. தளி
மனிதநேய மக்கள் கட்சி

  1. ராமநாதபுரம்
  2. ஆம்பூர்
புதியதமிழகம்

  1. ஓட்டப்பிடாரம்
  2. நிலக்கோட்டை
சமத்துவ மக்கள் கட்சி

  1. தென்காசி
  2. நாங்குனேரி
பார்வர்டுபிளாக்

  1. உசிலம்பட்டி
இந்திய குடியரசு கட்சி

  1. கே.வி.குப்பம்
கொங்கு இளைஞர் பேரவை

  1. பரமத்தி வேலூர்

தட்ஸ்தமிழ் இணையத்திற்கு ஒரு கோரிக்கை

தட்ஸ்தமிழ் இணையத்தில்,

இந்த செய்தி இப்போது தலைப்புச் செய்தி(14-05-2011, சனி, காலை 10:19)

”தென் மாவட்டங்களை மொத்தமாக பறிகொடுத்த திமுக கூட்டணி-அதிர்ச்சியில் மு.க. அழகிரி!.”




2001ஆம் ஆண்டு திமுகவும், காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்களா? உங்களது செய்திப்பிரிவு அருமையிலும் அருமை

Copy & Paste வேலையை கூட சரியாக செய்வதில்லையே, ஏன்?

அமுதப்ரியன்


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு


காணமல் போனவர் பற்றி அறிவிப்பு,


பெயர் : வடிவேலு


நிறம் : கருப்பு


வயது : 40


ஊர் : மதுரை.


இவரை பற்றிய தகவல் அறிந்தால் விஜயகாந்திடம் ஒப்படைக்கவும் நன்றி.


தேர்தல் முடிவு